sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மகப்பேறு காலம்... முக்கிய தருணம்!

மகப்பேறு காலம்... முக்கிய தருணம்!

மகப்பேறு காலம்... முக்கிய தருணம்!


PUBLISHED ON : ஆக 30, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை சரியாக பின்பற்றுவதே, தாயும், சேயும் நலமாக இருக்க உதவுகிறது. இந்த காலகட்டத்தில் தான் புத்தகம் படிப்பது, நேர்மறை சிந்தனை யை வளர்த்துக் கொள்வது, சத்துள்ள உணவுகளை

உட்கொள்ளுவது என, குழந்தையின் நலனை காப்பதற்கான முயற்சியின் அடித்தளம்.

இதில், திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் பாலுடன் விதாரி, சதாவரி, ஆஸ்திமது, பிரமி ஆகிய சில மூலிகைகளுடன் தேன் மற்றும் நெய் கலந்து குடிக்க வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இந்த காலகட்டத்தில் சிசுவின் உடலில் கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சி நடைபெறும்.

இம்மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய், ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு, உணவை தாயின் ரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும், ஒரே உணவாக அமைகிறது. கொழுப்பு, காரம், உப்பு மற்றும் நீரை சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் சிறிதளவு துளசியை

உட்கொண்டு வந்தால் பிரசவ வலி குறையும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் மனதாலும், உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும், கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். அவை:

* கர்ப்பிணிகள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள்,பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. ஆகவே, மாத்திரை உட்கொள்ளும் அளவிற்கு, காய்கறிகளையும் சேர்த்து கொள்வது அவசியம்.

* மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

* கர்ப்பிணிகள் சரியான நேரத்திற்கு, உணவு அருந்த வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

* முக்கியமான ஒன்று, புத்தகத்தை படிப்பது சிந்தனைகளை வளர்க்கும். நல்லவையே கேட்டல், பழகுதல் மூலம் நாளடைவில், குழந்தைகளின் குணமும் அவ்வாறே அமைய வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us