sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கொழுப்பை கரைக்கும் செம்பருத்தி பூ!

/

கொழுப்பை கரைக்கும் செம்பருத்தி பூ!

கொழுப்பை கரைக்கும் செம்பருத்தி பூ!

கொழுப்பை கரைக்கும் செம்பருத்தி பூ!


PUBLISHED ON : மே 28, 2017

Google News

PUBLISHED ON : மே 28, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய பரபரப்பான, வேகமான உலகில் மனிதர்கள் பலருக்கும் எதிர்பாராமல் தாக்கும் நோய் என்றால் அது இதயநோய்தான். இதயம் பலகீனமானவர்களுக்கு மட்டும் தான் இது வரும் என்றில்லை. நல்ல ஆரோக்கியமான, திடகாத்திர மாந்தரையும் கூட, இந்த இதய நோய் திடீரென தாக்குவதுண்டு.

இன்றைய சூழலில், சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக தாக்கும் நோயாக இதயநோயே உள்ளது. ஒருவகையில், சர்க்கரை வியாதி, உடல் பருமன், ரத்தச்சோகைபோன்ற நோய்கள் எல்லாமே, இறுதியாக இதயநோயில்தான் முடிகின்றன. ஆகவே, 'இதயம் மனித உடல் பாகங்களிலேயே பத்திரமாகப்பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்' என்கின்றனர் மருத்துவர்கள்.

இதயநோய்கள் என்றும் தாக்காமல் தவிர்க்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவை உண்ணுதலே நிரந்தரத்தீர்வு. அதையும் தாண்டி, பலருக்கு இதய நோய் தாக்கினால், அவர்கள் நாட வேண்டியது செம்பருத்திப்பூவைத்தான். இந்தப்பூ ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்துவிடும்.

அத்தகு அபூர்வ சக்திகொண்டது இந்தப்பூ.

தினமும், காலையில் வெறும் வயிற்றில், ஒரு செம்பருத்திப்பூவின் மகரந்தத்தாளை நீக்கிவிட்டு, அதன் இதழ்களை மட்டும் சாப்பிட்டு வந்தால்,

இதய அடைப்பும் கூட, நம்மை அண்டுவதில்லை. தொடர்ந்து சாப்பிட்டு வருவோருக்கு எப்போதும் இதயநோய் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருசிலருக்கு அடிக்கடி, இதயப்படபடப்பு ஏற்படுவது உண்டு. அவர்களுக்கு சீரான இதயத்துடிப்பும் இருக்காது. அதுவே அந்த படபடப்புக்கு காரணம். இதுபோன்ற அறிகுறி உள்ளவர்கள், தினசரி பேரிக்காயை சாப்பிட்டுவர இதயப்படபடப்பு சரியாகும். இதயத் துடிப்பும் அவர்களுக்கு சீராகும்.

இவை தவிர இதயநோய்கள் குணமாக வேறுசில எளிய வழிமுறைகளும் உள்ளன. துளசி இலைச்சாறு, தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, வெந்நீரில் கலந்து, சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் நீங்கும். ஒரு சிலருக்கு இதயத்தில் ஊசி குத்துவது போன்ற, வலி அவ்வப்போது தெரியும். அவர்கள், கருந்துளசி, செம்பருத்திப்பூ இரண்டையும் சேர்த்து, கஷாயம் செய்து காலை மற்றும் மாலை வேளைகளில் தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வரவேண்டும்.

அவ்வாறு செய்தால், இதய வலி குறைவதுடன், இதயத்திற்கு வலிமையும் சேரும்.

இதய பலகீனம் உள்ளவர்கள், தினசரி ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். மேலும் இதயம் பலம்பெற அத்திப்பழத்தினை காயவைத்து, அதை பொடியாக்கி, ஒரு டீ ஸ்பூன் அளவிற்கு தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால், இதயம் மேலும் பலமடையும்.

இதைப்போல, மாதுளைச்சாறு உடன் தேன்கலந்து காலை, மாலை குடித்துவர ஜீரணசக்தி அதிகரித்தும் இதயம் பலமடையும். இதயம் பலகீனம் உள்ளவர்கள், செம்பருத்திப்பூவை உலர்த்திப் பொடி செய்து, அதனுட ன் சமஅளவிற்கு மருதம் பட்டைப்பொடியும் சேர்த்து பாலுடன் அருந்தி வந்தால் இதயபலகீனம் நீங்கும்.






      Dinamalar
      Follow us