தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இளநரை நீக்கும் இலந்தை இலை

இளநரை நீக்கும் இலந்தை இலை

இளநரை நீக்கும் இலந்தை இலை


PUBLISHED ON : பிப் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 21, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும், செரிமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கி விட்டு, பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொள்ளவும். இதை காலையும், மாலையும், 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும், உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும், இலந்தைப் பழம் பயன்படுகிறது. கால்சிய சத்து, இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால், எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும், சத்து இழப்புகளை ஈடு செய்யும்.

இலந்தை இலை ஒரு பிடி அளவு எடுத்து, அதனுடன், 6 மிளகு, 4 பூண்டு பல்லு சேர்த்து அரைத்து, மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

இப்படி செய்து வந்தால், கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கி, வலி குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்.

இலந்தை இலையை மை போல் அரைத்து, பூசி வந்தால், தலையில் ஏற்படும் புழுவெட்டு நீங்கும். இலந்தை இலையின் சாறெடுத்து, அதனை உள்ளங்கை, உள்ளங்கால்களில் பூசி வந்தால், அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

இளநரையைப் போக்கும் தன்மை, இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி, 10 நிமிடங்கள் வரை ஊற விட்டு அலசினால், இளநரை மாறும். மந்த புத்தியுள்ளவர்கள் இல்ந்தைப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால், மூளை புத்துணர்வு பெறும்.

ஒரு கைப்பிடி இலந்தம் பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, அரை லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து, படுப்பதற்கு முன், அருந்தி வந்தால், மூளை புத்துணர்ச்சி பெறும். பற்கூச்சம், ரத்தக்கசிவுக்கு இலந்தையை மென்று தின்னலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us