தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பல் கோளாறுகள்!

ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பல் கோளாறுகள்!

ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பல் கோளாறுகள்!


PUBLISHED ON : ஜன 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களின் வாழ்க்கை முழுதும் ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டிரோன் ஆகிய பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு, மாதவிடாய் துவக்கம், கர்ப்ப காலம், மாதவிடாய் நிறைவு வரை, அந்தந்த வயதிற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.

இந்த ஹார்மோன் மாற்றங்கள், பல், ஈறு ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்பதை மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டீன் ஏஜ்

இப்பருவத்தில் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால், 'பியூபெர்ட்டி ஜின்ஜிவிடிஸ்' எனப்படும் 11 -- 14 வயதில் வரும் பருவ ஈறு அழற்சி வரலாம்.

இதனால், ஈறு சிவப்பாகுதல், வீக்கம், எளிதில் ரத்தம் வருதல் போன்ற மாற்றங்கள் ஏற்படலாம்.

பற்கள், பல் இடுக்குகளில் தேங்கும் உணவுத் துகள்கள் மீது, ஹார்மோன்கள் அதிகப்படியாக செயலாற்றுவதால், பிளாக் எனப்படும் நிரந்தர படிமம் உருவாகி, ஈறு அழற்சி ஏற்படுகிறது.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் ஈஸ்ட் ரோஜன், புரொஜெஸ்டிரோன் அளவு அதிகரிப்ப தால், ஈறு அழற்சி அதிகரிக்கக்கூடும். இதை, கர்ப்ப கால ஜின் ஜிவிடிஸ் என்று சொல்கிறோம்.

சில பெண்களின் ஈறுகளில் சிறிய, பாதிப்பை ஏற்படுத்தாத கட்டி போன்ற வளர்ச்சி உருவாக லாம். முறையான பல் பராமரிப்பு, பல் மருத்துவ ரின் ஆலோசனை மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.

கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை பெறுவது பாதுகாப்பானது.

மாதவிடாய் காலம்

சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது, தற்காலிகமாக மாதவிடாய் ஜின்ஜிவிடிஸ் ஏற்படலாம். இதில் ஈறு வலி, ரத்தம் வருதல், எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். இது தற்காலிகமானது; முறையான பல் பராமரிப்பால் குறைக்க முடியும்.

கர்ப்ப தடுப்பு மாத்திரைகளை பயன்படுத்தும் போது, ஹார்மோன் மாற்றங் களால் ஈறு அழற்சி அதிகரிக்கலாம்.

மெனோபாஸ் ஜின்ஜிவிடிஸ்

மாதவிடாய் நிற்கும் வயதில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் வாய் உலர்வு, வாய் எரிச்சல், தொற்றுகளின் அபா யம் அதிகரிக்கலாம். மேலும், எலும்பு தேய்மானம் காரணமாக, பற்களை தாங்கும் எலும்புகள் பாதிக்கப்படலாம். இதனால், பற்கள் தளர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

பெண்கள் பின்பற்ற வேண்டியவை

தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். அந்த சமயத்தில், பல் இடைவெளிகளை சுத்தம் செய்வதும் அவசியம்.

கர்ப்ப காலத்தில் பல் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். மெனோபாஸ் காலத்தில் வாய் உலர்வை அலட்சியம் செய்வது கூடாது.

ஹார்மோன் மாற்றங்கள் இயற்கையானது. அந்த சமயத்தில் ஏற்படும் பல் பிரச்னைகளை அலட்சியப் படுத்தாமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது கட்டா யம்.



டாக்டர் எஸ்.வேதநாயகி, பல் மருத்துவர், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை,சென்னை 99956 15677vedhanayakisenthils@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us