தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வைரஸ் பாதிப்பால் ஏற்படும் சர்க்கரை கோளாறு!

வைரஸ் பாதிப்பால் ஏற்படும் சர்க்கரை கோளாறு!

வைரஸ் பாதிப்பால் ஏற்படும் சர்க்கரை கோளாறு!


PUBLISHED ON : நவ 21, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாக்கமின்மை, மன அழுத்தம், முறையற்ற உணவுப்பழக்கம், அதீத வேலை பளு... இவை பொதுவான காரணிகள் ஆகி விட்ட இன்றைய சூழலில், சர்க்கரை கோளாறு மரபு ரீதியிலான பிரச்னை என்பது மாறி, வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் கோளாறு ஆகி விட்டது. எனவே, யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரை கோளாறு வரலாம்.

கொரோனா சமயத்தில், 'ஒர்க் பிரம் ஹோம்' தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்தனர். வீடு, அலுவலகம் இரண்டையும் சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டிய அழுத்தம், உடற்பயிற்சி செய்யாமல், உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருந்தவர்கள் தான் அதிகம்.

இதனால், ஏற்கனவே சர்க்கரை கோளாறு இருந்து, கட்டுப்பாட்டில் வைத்திருந்த பலருக்கும் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகி விட்டது. இன்னொருபுறம், மரபு ரீதியில் சர்க்கரை கோளாறு வரும் வாய்ப்புகள் அதிகம் இருந்தவர்களில், கொரோனா பாதிப்பிற்கு பின், சர்க்கரை கோளாறு உறுதியாகி விட்டது.

நுரையீரலை மட்டுமே கொரோனா பாதிக்கும் என, சிகிச்சை கவனம் முழுதும் அதிலேயே இருந்தது. கொரோனாவிற்கு பின், அதுவரையிலும் சர்க்கரை கோளாறு இல்லாதவர்களுக்கும், அதன்பின் பாதிப்பு ஏற்பட்டது. முடி உதிர்தல், செரிமான கோளாறு என்று பல பிரச்னைகளும், வைரசின் பிந்தைய பாதிப்பாக பலருக்கும் இருக்கின்றன. இவை, பல மாதங்கள் வரை நீடிக்கிறது.

சர்வதேச அளவில் பல ஆய்வுகள் தற்போது வெளி வருகின்றன. அதன்படி, உடலின் எந்த உறுப்பையும், கொரோனா பாதிக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. கணையத்தின் செல்களை பாதிப்பதால், இன்சுலின் சுரப்பில் பிரச்னை ஏற்பட்டு, கொரோனா பாதித்தவர்கள், சர்க்கரை நோயாளிகளாகி விடுகின்றனர். 'ஸ்டிராய்டு' மருந்துகள் எடுத்துக் கொள்வதால், சர்க்கரை கோளாறு வருகிறது என்பதும் தவறு.

இது குறுகிய கால சிகிச்சை தான். மருந்து சாப்பிட்ட 48 மணி நேரத்திற்கு வேண்டுமானால் அதன் பாதிப்பு இருக்கலாம். தொடர்ந்து இருப்பது கணைய செல்கள் பாதிப்பதால் தான். கொரோனா சிகிச்சை முடிந்த மூன்று மாதங்கள் கழித்து, முழு மருத்துவ பரிசோதனை செய்தால், கொரோனாவின் பிந்தைய பாதிப்புகளை, துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை தரலாம். இளம் வயதினருக்கு அறிகுறிகளுடன் சர்க்கரை கோளாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதிக அயர்ச்சி, அதிக பசி, சாப்பிட்ட பின்னும் பசி, இரவில் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம், முடி உதிர்வது, தோல் வறட்சி போன்ற அறிகுறிகள் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இருந்தால், கொரோனா பாதிப்பிற்கு பின் சர்க்கரை கோளாறு இருக்க வாய்ப்புகள் அதிகம்.

டாக்டர் அஸ்வின் கருப்பன்,

சர்க்கரை கோளாறு மருத்துவ ஆலோசகர்,

குளோபல் ஹெல்த் சிட்டி,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us