PUBLISHED ON : ஜூன் 01, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமரன், வேலூர்: வயிற்றுப்போக்கு இருந்தால் உணவு சாப்பிடக்கூடாது எனக் கூறப்படுகிறதே?
அப்படியில்லை. அசைவ உணவுகளையும், வறுத்த, பொரித்த உணவுகளையும் சாப்பிடக்கூடாது. தயிர் சாதம், மோர் சாதம் சாப்பிடலாம். தண்ணீரை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இட்லி, பருப்பு சாதம், தயிர் சாதம், அரிசி கஞ்சி, ஆப்பிள் போன்றவற்றை தரலாம். 'மினரல் வாட்டர்' என்ற போர்வையில், சரியாக சுத்திகரிக்கப்படாத குடிநீர் விற்கப்படுகிறது. மினரல் வாட்டராக இருந்தாலும், கொதிக்க வைத்து, ஆற வைத்தே குழந்தைகளுக்கு தர வேண்டும்; டீ, காபி கொடுப்பது கூடாது.

