sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு

/

ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு

ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு

ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு


PUBLISHED ON : பிப் 17, 2016

Google News

PUBLISHED ON : பிப் 17, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்த்திக்கு நடுத்தர வயது தான்; பெரிய நிறுவனமொன்றின் விளம்பர பிரிவில் வேலை. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்; மூத்தவள் 6ம் வகுப்பு படிக்கிறாள்; இளையவள் 2ம் வகுப்பு படிக்கிறாள். குழந்தைகளை வார இறுதி நாட்களில், பூங்காவிற்கு அழைத்துச் செல்வது கார்த்தியின் வழக்கம். அப்போது, குழந்தைகளை ஊஞ்சல் ஆட்டி விட நிற்கும் சமயத்தில், காலில் வலியை உணர்ந்தார்.

திடீரென்று, சில நாட்களாக, வலது காலை ஊன்றி நிற்க கூட முடியவில்லை; ஏன் என்றும் தெரியவில்லை. ஆனால், காலில் திராட்சை கொத்து போல், நரம்பு முடிச்சுகள் காணப்பட்டன. அதன்பின் தான் நடக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில், என்னை சந்திக்க வந்திருந்தார். சில பரிசோதனைகள் செய்த பின், பிரச்னையை கண்டறிந்து விட்டோம். கார்த்திக்கு இருப்பது, 'வெரிகோஸ் வெயின்!' காலிலுள்ள நரம்புகள் புடைப்படைவதே, 'வெரிகோஸ் வெயின்' என்றழைக்கப்படுகிறது. வெரிகோஸ் வெயின் பிரச்னை வந்தால், காலில் அரிப்பு, கால் வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். கணுக்காலின் உள் பகுதியில் புண் ஏற்படும். அந்தப் பகுதி, கறுப்பாக மாறிவிடும். இதைக் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் எளிது. 'வாஸ்குலர்' அறுவை சிகிச்சை நிபுணரை அணுகினால், 'டாப்ளர்' என்ற

கருவியைப் பயன்படுத்தி, கால் ரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிவர். ஆரம்பநிலை என்றால், மருந்து, மாத்திரை, 'ஸ்டாக்கிங்' என்ற சாக்ஸ் அணிவதன் மூலம் குணப்படுத்த முடியும். சில ஆண்டுகளுக்கு முன் வரை, வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு, திறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, 'ரேடியோ ப்ரீக்குவன்ஸி அபலேஷன், லேசர்' என, நவீன சிகிச்சைகள் வந்து விட்டன. இதில், சிறு துளையிட்டு, ரத்தக் குழாயில் ஒயர் போன்ற அமைப்பைச் செலுத்தி, ரேடியோ ப்ரீக்குவன்ஸியை, பாதிக்கப்பட்ட குழாயை ஒட்டிவிடுவோம். அசுத்த ரத்தமானது தசைகளுக்கு உள்ளாகச் செல்லும், மற்றொரு குழாய் வழியே மேலே செல்லும். இந்த அறுவை சிகிச்சை, குறுகிய நேரத்தில் செய்யப்படுகிறது. சிகிச்சை முடிந்து இரண்டே நாட்களில், வேலைக்குச் செல்லலாம்! வெரிகோஸ் வெயின் பாதிப்பு, பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது. ஹார்மோன் சீரற்ற நிலையிலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்ற பெண்களுக்கும் ஏற்படுகிறது. இதோடு ஆசிரியர், சாலை பாதுகாப்பு, காவல் துறை போன்ற பணியில் இருப்பவர்கள், கடைகளில் நிறைய நேரம் நின்று வேலை பார்ப்பவர்கள், காலில் ரத்தக் கட்டு இருப்பவர்கள் போன்றோருக்கு, ரத்த நாளங்களிலுள்ள வால்வுகள் பாதிப்படைந்து, வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படுகிறது. கார்த்திக்கு மேலே கூறப்பட்டது போல், 'ரேடியோ ப்ரீக்குவன்ஸி அபலேஷன்' சிகிச்சையின் மூலம், அவரின் பிரச்னை சரி செய்யப்பட்டது.

- தி.கபில் பாலிகா

ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்

புதுச்சேரி73732 02111






      Dinamalar
      Follow us