
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். சாம்பாரோ, வத்தக்குழம்போ, புளிக்குழம்போ... எதுவானாலும், தாளிக்கும்போது, சிறிது வெந்தயம் தூக்கலாகச் சேர்த்துப் பாருங்கள்.
முழுதாக வெந்தயம் சாப்பிடப் பிடிக்காதவர்கள், கொதித்து இறக்கும் முன், வெந்தயப் பொடியைத் தூவி பாருங்கள்... உங்கள் சமையலறை வாசம், தெருக்கோடி வரை வீசும். மணத்தில் மட்டுமின்றி, குணத்திலும் மிகச் சிறந்தது வெந்தயம்.
ஜீரணமாகாத மாவுச்சத்தைதான், நாம் நார்ச்சத்து என்கிறோம். அந்த நார்ச்சத்து வெந்தயத்தில் மிக அதிகம். தவிர பெக்டினும், பிசினும்கூட அதிகம். 100 கிராம் வெந்தயத்தில், 40 சதவீதம் பிசின் உள்ளது. அபரிமிதமான புரதமும் நார்ச்சத்தும் கொண்ட வெந்தயத்தின் மகிமை, தெரிந்தால், சாப்பிடுகிற உணவிலிருந்து வெந்தயத்தை ஒதுக்கித் தள்ளும் பழக்கத்தை மாற்றிக் கொள்வீர்கள்.