sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/இருதயத்தை பாதிக்கும் நோய்கள்

இருதயத்தை பாதிக்கும் நோய்கள்

இருதயத்தை பாதிக்கும் நோய்கள்


PUBLISHED ON : ஜன 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இருதய நோய்கள் வர காரணம் என்ன?

கொழுப்பு நிறைந்த உணவை உண்பது, புகை மற்றும் குடிப்பழக்கம், உடல் பருமன், மரபியல் கோளாறுகள், துரித உணவு உண்பது உட்பட பல காரணங்கள் உள்ளன.

யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் அபாயம் உண்டு?

சிறுவயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள், பரம்பரை காரணமாகவும் மாரடைப்பு வரலாம்.

மாரடைப்பு தவிர வேறு என்னென்ன நோய்கள் இருதயத்தை பாதிக்கும்?

இருதய வால்வுகள் பழுதடைவது, இருதய தசை பலவீனம், மகா தமனி வீக்கம் அல்லது கிழிசல், குழந்தைகளுக்கு பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டை அல்லது மரபியல் காரணமாக பிறவிக் கோளாறுகள் இருதயத்தை பாதிக்கின்றன.

இருதய நோய்களுக்கு என்னென்ன நவீன அறுவை சிகிச்சைகள் உள்ளன?

இருதய வால்வை மாற்றுவது அல்லது சீரமைப்பது, பேஸ்மேக்கர், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட், வால்வு பொருத்துவது, கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் சர்ஜரி, மினிமல் இன்வேஸிவ் சர்ஜரி.

கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் மற்றும் மினிமல் இன்வேஸிவ் அறுவை சிகிச்சை முறைகள் பற்றி?

அடைப்பு ஏற்பட்ட இருதய தமனியில் புதிதாக வேறொரு தமனிக் குழாய் மூலம் மாற்றுப்பாதை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை சீரமைப்பது கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் அறுவை சிகிச்சை. ஐந்து முதல் ஏழு செ.மீ., வரை மார்பு பகுதியில் சிறு துளையிட்டு சிறிய மைக்ரோ கேமரா உதவியுடன் மானிட்டரில் இருதயத்தை பார்த்துக் கொண்டே அங்குள்ள ரத்தக் குழாயின் அடைப்பை சரி செய்வது மினிமல் இன்வேஸிவ் அறுவை சிகிச்சை முறையாகும்.

இருதய வால்வு பிரச்னை வந்தால் என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?

ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும் இருதய வால்வுகள் வயதாகும்போது வலுவிழந்து சரியாக செயல்படாது. இதனால் பழுதடைந்த வால்வுகளை மாற்றுவது அவசியம். இளம் வயதினருக்கு இப்பாதிப்பு வந்தால் வால்வுகளை மாற்றுவதை விட சீரமைப்பது நல்லது.

எவ்வகையான இருதய நோய்க்கு பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும்?

இருதயத்துடிப்பு சீரற்று பலவீனமாக இருந்தால் பேஸ்மேக்கர் எனும் சிறிய எலக்ட்ரானிக் கருவியை மார்பில் பொருத்த வேண்டும். மின் அதிர்வுகளை இருதயத்திற்கு அனுப்புவதன் மூலம் சீரற்ற இருதயத் துடிப்பை பேஸ்மேக்கர் சரி செய்யும்.

இருதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை?

புகை, மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவில் காய்கறிகள், பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு நிறைந்த உணவை தவிர்த்தாலே இருதயத்தை காக்கலாம்.

டாக்டர் ர.விவேக்

இருதயநோய் நிபுணர், விருதுநகர், 9894556667

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us