sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

எப்பவும் முகத்தை உம்முன்னு வெச்சுக்காதீங்க!

/

எப்பவும் முகத்தை உம்முன்னு வெச்சுக்காதீங்க!

எப்பவும் முகத்தை உம்முன்னு வெச்சுக்காதீங்க!

எப்பவும் முகத்தை உம்முன்னு வெச்சுக்காதீங்க!


PUBLISHED ON : நவ 09, 2014

Google News

PUBLISHED ON : நவ 09, 2014


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எந்த ஒரு கோளாறும், ரொம்ப நாள் நீடிக்கக் கூடாது; அப்படிபோனால் பெரிய சிக்கலுக்கு காரணமாகி விடும். அதேபோல், மனத்தளர்ச்சி (டிப்ரஷன்) பிரச்னையையும் உடனே கவனிக்க வேண்டும்.

l டிப்ரஷன் என்றால், சோர்வு, வருத்தம், வேதனை என்று கூறலாம். மனதளவில் எந்த விதமான உணர்ச்சிகளும், இவற்றுக்கு வழி வகுத்தால் அது தான் டிப்ரஷன். சில சூழ்நிலைகள், சம்பவங்களால் டிப்ரஷன் வரலாம்.

l எப்போதும் முகத்தை உம்மென்று வைத்திருந்தால், மனத்தளர்வு நோய் ஏற்படும். உம்மனாமூஞ்சியாக இருக்காமல், சிரித்த முகமாக இருக்க வேண்டும். தனக்கு நேர்ந்த நிலைமையால், எப்போதும் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் இருப்பது, சிரிக்கக்கூட யோசிப்பது, எந்த ஒரு விஷயத்திலும் மனம் ஒப்பாமை மனத் தளர்ச்சியை ஏற்படுத்தும்.

l இதனால், முகத்தில் புன்முறுவல் வராது; அப்படியே வந்தாலும், அதை அடக்கிக்

கொண்டு விடுவர். அர்த்தமில்லாத

கோபம் வரும்; தேவையில்லாத

குழப்பம் வரும்; அதுவே டிப்ரஷனில் விட்டு விடும்; அதன்பின் கேட்கவே வேண்டாம்... ரத்த அழுத்தம்; சர்க்கரை நோய், கதவை தட்ட ஆரம்பித்து விடும்.

l எல்லா நோய்களுக்கும் இருப்பது போல, இதற்கும் பரம்பரை பாதிப்பும் ஒரு காரணம். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் அடுத்த காரணம்.

l மூளையில் உள்ள ஒருவித ரசாயன மாற்றம் தான் டிப்ரஷனை அதிகப்படுத்துகிறது.

l ஆண்களை விட, பெண்களிடம் தான்

அதிகமாக இந்த பாதிப்பு உள்ளதாக

நிபுணர்கள் கூறுகின்றனர்.

l பரம்பரையில் யாருக்காவது இருந்தால், வாரிசு வழியில் அது தொடர வாய்ப்பு உண்டு. மூன்று தலைமுறைக்கு முன்

இப்படி ஒருவருக்கு இருந்தால், இந்த

தலைமுறையில் ஒருவருக்கு நேரலாம்.

l பெற்றோர், உறவினர் உட்பட நெருங்கியவர்கள் மரணம், டிப்ரஷனுக்கு

காரணமாகிறது.

l சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் கூட இந்த பாதிப்பு வரும்.

l கோபம், ஆத்திரம், தோல்வி மனப்பான்மை போன்றவையும் டிப்ரஷனில் விட்டு விடும்.

l துாக்கம் வராது; சோர்வு ஏற்படும்; அடிக்கடி தலைவலி வரும். சிறிய விஷயங்களுக்கு கூட அழுகை வரும்; எப்போதும் ஒரு வித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

பசி அறவே இருக்காது; சாப்பிட பிடிக்காது. படிப்பிலும், வேலையிலும் ஈடுபாடு காட்ட முடியாது; உடலில் ஒருவித வலி இருந்து

கொண்டே இருக்கும். டாக்டர் பரிசோதித்து, டிப்ரஷனுக்கு எது முக்கிய காரணமாக

உள்ளது என்பதை கண்டுபிடிப்பார்.

'ஆன்டி டிப்ரஷன்' மாத்திரைகள் உள்ளன; அவற்றை சில நாள் சாப்பிட்டு வந்தால், டிப்ரஷன் அளவு கட்டுப்படும். இரண்டு வாரத்தில் குணம் தெரியும்; முதலில், நல்ல துாக்கம் வரும்; மன திடத்தை ஏற்படுத்த உடல், மனது பயிற்சிகள் உள்ளன.

தாழ்வு மனப்பான்மை, கோபம் எல்லாம் பறந்து விடும். கட்டுப்பாட்டுக்குள்

வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.






      Dinamalar
      Follow us