தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரின் டைரி குறிப்பு: ஜனவரி, 7, 2016

டாக்டரின் டைரி குறிப்பு: ஜனவரி, 7, 2016

டாக்டரின் டைரி குறிப்பு: ஜனவரி, 7, 2016


PUBLISHED ON : மார் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரகு பொறியியல் படித்திருக்கிறார்; வயது 24. கணினி துறையில், லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார். ரகு தன் தந்தையிடம், 'நீங்கள் ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தை, நான் இப்போதே வாங்குகிறேனே' என்று, அடிக்கடி வம்பு இழுப்பார். அதற்கு ரகுவின் அப்பா, 'நான் அந்த கால பி.ஏ.' என்பார் பெருமையோடு! ரகுவின் தாய் நடப்பதையெல்லாம் சிரித்தபடி வேடிக்கை பார்ப்பாரே தவிர, யாருக்கு சாதகமாகவும் பேச மாட்டார். ரகுவின் மீது பெற்றோர் உயிரையே வைத்திருந்தனர். ரகுவிற்கு திருமணம் செய்ய, தங்களுக்கு மகளாக இருக்க, ஒரு மருமகளை தேடினர். இப்படி மகிழ்ச்சியாக சென்ற அவர்கள் வாழ்க்கையில், ஒரு நாள் இடி விழுந்தது. ரகுவிற்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, உயிரே போகும்படி முதுகு வலி இருந்தது. நடக்கவும், உட்காரவும், நிற்கவும் மிகவும் சிரமப்பட்டார்.

இதோடு, குதிகால் வலி, வலது கால் முட்டியில் வீக்கம் வேறு, அதற்காக வலி ஊசிகள் நிறைய போட்டதால், ஊசிகள் போட்ட இடத்தில் சீழ் பிடித்துவிட்டது; இதற்கு சிகிச்சை பெற, நான் பணிபுரிந்த மருத்துவமனைக்கு ரகு வந்தார். அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்தேன். அதன் முடிவில் ரகுவிற்கு, 'ஸ்பாண்டைலோ ஆர்த்தரைடிஸ்' எனப்படும் முதுகுத் தண்டுவாதம் இருந்தது தெரியவந்தது.

இதற்கிடையில் இடது கால் முட்டியும் வீக்கமடைய ஆரம்பித்தது. ரகுவின் இந்நிலைமையால் அவரது திருமணமும் தள்ளிப் போனது. ரகுவின் பெற்றோர் மனமுடைந்து விட்டனர். வழக்கமாக ஆர்த்தரைடிசுக்கு என்று இருக்கும் சிறப்பு மருந்துகளை அளித்தும் பலனில்லை.

ரகுவிற்கு முதல் கட்ட சிகிச்சையை ஆரம்பித்து, கால் வீக்கங்களுக்காக ரத்த நாளம் வழியாக, 'இன்பிலிக்சிமேப்' என்ற மருந்தை செலுத்தினோம்; சிறிது உடல்நலம் தேறினார். இரண்டு வார இடைவெளியில், இரண்டாம் கட்ட சிகிச்சையில் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார்; சிகிச்சையோடு இயன்முறை பயிற்சியும் எடுத்துக் கொண்டார். மூன்று கட்ட சிகிச்சைக்குப் பின், மருத்துவ ஆலோசனையோடு மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார். முகுதுத் தண்டுவாதம் வர முக்கிய காரணம் மரபியல். HLA/ B27 என்ற காரணிதான் முகுதுத் தண்டுவாதத்தை உண்டாக்குகிறது. பெற்றோருக்கு முதுகுத்தண்டு வாதம் இருப்பின், குழந்தைகளையும் அது பாதிக்கும். சொரியாசிஸ் என்ற சரும நோய் மற்றும் குடல் அழற்சி நோய் இருந்தாலும் இது வரலாம்.முகுதுத் தண்டு வாதம் கால் முட்டி, குதிகால், முகுதுத் தண்டு மட்டுமின்றி கண்கள், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் பாதிக்கும். முகுதுத்தண்டு வாதத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் கட்டுப்படுத்துவது எளிது. இதுவே முற்றிய நிலையான, 'ஆங்கலோசின் ஸ்பாண்டிலைடிஸ்' எனும் நிலைக்கு போக விடக்கூடாது; ஏனென்றால், குணப்படுத்துவது கடினமாகி விடும். ரகு சற்று முன்னதாகவே சிகிச்சைக்கு வந்ததால், அவரது பிரச்னை கட்டுப்படுத்தப்பட்டது. கடைசிகட்ட மருத்துவ ஆலோசனைக்காக வந்த ரகு, தன் திருமண அழைப்பிதழை, என் கைகளில் திணித்து, 'கட்டாயம் வர வேண்டும்' என்றார்.

எஸ்.ஷியாம் ருமட்டாலஜிஸ்ட் - மூட்டுதசை மற்றும் இணைப்புத்திசு நோய்களியல் சிறப்பு நிபுணர், சென்னை. 96001 90790

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us