sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/தேங்காய் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிக்குமா?

தேங்காய் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிக்குமா?

தேங்காய் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிக்குமா?


PUBLISHED ON : டிச 18, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



'டிஸ்லிபிடெமியா' என்பது ரத்தத்திலுள்ள கொழுப்புகளின் அளவில் ஏற்படும் மாற்றம். அது குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம். ரத்தத்திலுள்ள கொழுப்புகளில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவற்றில், ஹெச்.டி.எல்., என்பது நல்ல கொழுப்பு; எல்.டி.எல்., - டி.ஜி.எல்., ஆகிய இரண்டும் கெட்ட கொழுப்புகள்.

இவற்றின் அளவுகளை பரிசோதிப்பது போன்றே, 'ஆப்போ லிப்போ பிராப்பர்டிஸ் பி'யை பரிசோதிப்பதும் அவசியம். ஏனெனில், இது இதய ரத்த குழாயில் ஏற்படும் பாதிப்புகளை கண்டுபிடிக்க உதவுகிறது.

இதய நோய் அபாயத்தை அத்தெரோஜெனிக் திறன் மூலம் அளவிட முடியும். உடலில் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பே, முறையற்ற கொழுப்பு அதிகரிக்க காரணம்.

கொழுப்பின் அளவை, 39 எம்.ஜி., / டி.எல்., என்ற அளவிற்கு குறைப்பதன் மூலம், இதய ரத்தக் குழாயில் அடைப்பு உட்பட கோளாறுகள் ஏற்படுவதை, 20 சதவீதம், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைக்க முடியும். 'டிரான்ஸ்' கொழுப்புகள் எனப்படும் நிறைவுறாத கொழுப்புகள், அதிக அளவில் இதய நோயை ஏற்படுத்துகின்றன.

எனவே, நிறைவுற்ற கொழுப்புகளும் தினசரி உணவில், 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. 'மோனோ, பாலி அன்சாச்சுரேடெட்' கொழுப்புகள், அதாவது கரையும் கொழுப்புகள், பொதுவாக கொழுப்பு அளவை பாதிக்காது.

தேங்காய் சாப்பிடுவதால் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது என்பது தவறான கருத்து. தேங்காயில் அதிகமாக உள்ள கொழுப்பு அமிலங்கள், கொழுப்பு அளவை பாதிக்காது.

எனவே, உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பின் தன்மையை புரிந்து கொள்வதும், அதன் சரியான பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம், இதய ரத்தக் குழாய் பாதிப்புகளை குறைக்கலாம்.

டாக்டர் அஸ்வனி லதா.கே,

பொது மருத்துவர், சென்னை.

88839 86743

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us