sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வெற்றிலை போட்டால் வாய் வெந்து விடுமா?

/

வெற்றிலை போட்டால் வாய் வெந்து விடுமா?

வெற்றிலை போட்டால் வாய் வெந்து விடுமா?

வெற்றிலை போட்டால் வாய் வெந்து விடுமா?


PUBLISHED ON : பிப் 10, 2013

Google News

PUBLISHED ON : பிப் 10, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வேல்குமார் மதுரை: 'அல்சர்' என்றால் என்ன?

சிறுகுடல் பகுதியில் ஏற்படும் புண், 'அல்சர்' எனப்படுகிறது. குறித்த நேரத்தில் உணவு அருந்தாதது, புகை மற்றும் குடி பழக்கம், மருத்துவரின் ஆலோசனை இன்றி, தலைவலி, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றால் அல்சர் வருகிறது.

'எச்-பைலோரி' கிருமி தொற்றாலும், அல்சர் ஏற்படுவதாக, தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

*பட்டுக்கனி, பொள்ளாச்சி: எப்போதாவது வெற்றிலை, பாக்கு போடும் பழக்கம் உள்ளவர்களில் சிலருக்கு, வெற்றிலை போட்ட சில நிமிடங்களிலேயே வாய் வெந்துபோக என்ன காரணம்?

வெற்றிலையில் சேர்க்கப்படும் சுண்ணாம்பு மற்றும் பாக்கில் உள்ள வேதிப் பொருட்கள் தான் இதற்கு காரணம். இதை கவனிக்காமல், தொடர்ந்து வெற்றிலை போட்டு வந்தால், உதடு சவ்வுகள் இறுகி, வாயை எளிதாக திறக்க முடியாத நிலை ஏற்படும். நாளடைவில், உணவுக் குழாய், இரைப்பையில் புற்றுநோய் உண்டாகும் அபாயமும் உள்ளது.

* கங்காதரன், சென்னை: இரைப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி உள்ளதா?

பல்வேறு காரணங்களால் ஏற்படும், இரைப்பை புற்றுநோயில், 10 முதல் 20 சதவீதம் வரை, 'எச்-பைலோரி' என்ற பாக்டீரியா தொற்றால் உண்டாகிறது. இதற்கான தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போதைய நிலையில், பாக்டீரியா தொற்று, ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

* சுப்பிரமணியன், விழுப்புரம்: அஜீரணம் பெரும் பிரச்னையாக உள்ளதே?

அளவிற்கு அதிகமாக உண்பது, உணவுடன், எண்ணெயில் பொரித்த மற்றும் மசாலா கலந்த உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது, அடிக்கடி ஓட்டலில் உண்பது போன்றவற்றால், அஜீரணம் ஏற்படுகிறது. 40 வயதை கடந்தவர்கள், இப்பிரச்னைக்கு அதிகம் ஆளாவதற்கு, போதிய உடற்பயிற்சி செய்யாதது தான் காரணம்.

* ஈஸ்வரன், திருநெல்வேலி: தொப்பையை கரைக்க, 'வாக்கிங், ஜாகிங்' ஆகியவற்றில், எது 'பெஸ்ட்?'

தொப்பையை கரைப்பதற்கு, 'ஜாகிங்' தான் சிறந்த வழி. ஆனால், அனைவராலும், 'ஜாகிங்' செய்ய முடியாது என்பதால், விரைவான, 'வாக்கிங்' மூலமும் தொப்பையை குறைக்கலாம்.

பேராசிரியர் கண்ணன்,

குடல், இரைப்பை அறுவை சிகிச்சை துறை

சென்னை மருத்துவக் கல்லூரி

98410 16958







      Dinamalar
      Follow us