தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/"சர்க்கரை நோயாளிக்கு இருதய ஆலோசனை அவசியமா'

"சர்க்கரை நோயாளிக்கு இருதய ஆலோசனை அவசியமா'

"சர்க்கரை நோயாளிக்கு இருதய ஆலோசனை அவசியமா'


PUBLISHED ON : நவ 10, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனது வயது 52. பன்னிரண்டு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. ரெகுலராக குடும்ப டாக்டரிடம் ஆலோசனை பெற்று வருகிறேன். ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் உள்ளது. நான் இருதய டாக்டரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டுமா?

எஸ்.நடராஜமூர்த்தி, மதுரை

சர்க்கரை நோய் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக ரத்தநாளங்கள், நரம்பு, மூளை, கண்கள், சிறுநீரகம், இருதயம் ஆகியவற்றை கூறலாம். இருதயத்தைப் பொறுத்தவரை இருதயத்தசை வீக்கம், பம்பிங்திறன் குறைவு, ரத்த நாளத்தில் அடைப்பு, மாரடைப்பு போன்றவை முக்கியமானவை. ஆகவே ஒவ்வொரு சர்க்கரை நோயாளியும், ரத்தத்தில் கொழுப்பின் அளவு, எக்கோ, டிரெட் மில் பரிசோதனை போன்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ பரிசோதித்துக் கொள்வது நல்லது. இதற்கு இருதய டாக்டரைத்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை.

உங்கள் குடும்ப டாக்டரையே சந்தித்து, பரிசோதனை செய்வதும் நல்லதுதான்.

எனக்கு மூன்று ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்கு 'Oடூட்ஞுண்ச்ணூtச்ண' என்ற மருந்தை எடுத்து வருகிறேன். இம்முறை டாக்டரை சந்தித்தபோது, அவர் அந்த மருந்தை மாற்றிவிட்டு, 'ஃணிண்ச்ணூtச்ண' என்ற மருந்தை தந்துள்ளார். இம்மருந்தை நான் தொடர்ந்து எடுக்கலாமா?

கே.ராமசுப்ரமணியன், கூடலூர்.

'Oடூட்ஞுண்ச்ணூtச்ண' என்பது அ.கீ.ஆ., வகையைச் சேர்ந்த மருந்து. இது ரத்தக்கொதிப்பை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கும் மருந்துதான். 'ஃணிண்ச்ணூtச்ண' என்பதும்

அ.கீ.ஆ., வகையைச் சேர்ந்ததுதான். இது 15 ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ள ஒரு சிறந்த மருந்து. இது சிறுநீரகத்திற்கு மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும், ரத்தத்தில் 'யூரிக் ஆசிட்' அளவை நன்கு குறைக்கும் மருந்து. பக்கவிளைவுகளும் குறைவு. எனவே இம்மருந்தை நீங்கள் தாராளமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

நான் சமீபத்தில் ரத்தத்தில் 'லிபிட் புரோபைல்' பரிசோதனை செய்தேன். இதில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பின் அளவு 162 மி.கி., என்ற அளவில் இருப்பதாக தெரியவந்தது. ஒரு மாதம் கழித்து மற்றொரு ஆய்வுக் கூடத்தில் இதே பரிசோதனையை செய்தபோது, எல்.டி.எல்., அளவு 110 மி.கி., என வந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?

பி. செந்தில்நாதன், விருதுநகர்

நீங்கள் கூறும் இருபரிசோதனைகளின் முடிவுகளில், ஏதோ ஒன்று நிச்சயம் தவறானதுதான். உங்கள் இருதய டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற்று, இவை 2ம் அல்லாத 3வது ஆய்வுக்கூடம் ஒன்றில் மீண்டும் பரிசோதனை செய்தால், அதன் முடிவுக்கு ஏற்ப உங்களுக்கு மருந்துகள் தேவைப்படலாம். ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க அவசியம் எல்.டி.எல்.,-ன் அளவு 100 மி.கி.,க்கு கீழ் இருந்தாக வேண்டும். இதற்கு சரியான உணவு, தினசரி நடைப்பயிற்சி, அவசியமானால் மருந்துகள் தேவைப்படும்.

- டாக்டர் சி.விவேக்போஸ்,

மதுரை. 0452- 233 7344

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us