PUBLISHED ON : ஜூன் 08, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜேந்திரன், மதுரை: என் 12 வயது மகளுக்கு எக்கோ பரிசோதனை செய்ததில், A.S.T., என வந்துள்ளது. இது என்ன வியாதி?
Atrial Septal Tefect என்பதன் சுருக்கமாகும். இது இதயத்தின் மேல் இரு பாகங்களுக்கு நடுவே, ஓர் ஓட்டை உள்ளது என்பதைக் குறிக்கும். இது பிறவியில் இருந்தே ஏற்படும் ஒரு வியாதி. இதற்கு இந்த ஓட்டையை மூடுவது ஒன்றே சிறந்த சிகிச்சையாகும். பெரும்பாலும் இந்த ஓட்டையை அறுவை சிகிச்சை இன்றி, பலூன் சிகிச்சை மூலம் எளிதில் சரிசெய்ய இயலும். இதனால் பிற்காலத்தில் எந்தப் பாதிப்பும் வராது. நெஞ்சில் தழும்பும் இராது.

