தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கனவு தவிர்... நிஜமாய் நில்!பாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு!

கனவு தவிர்... நிஜமாய் நில்!பாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு!

கனவு தவிர்... நிஜமாய் நில்!பாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு!


PUBLISHED ON : ஜூன் 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குதிகால் உயர செருப்பு போடுவது, முதுகுத் தண்டிற்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்பது சரி தான். ஆனால், 'ஹீல்ஸ்' இல்லாமல், சமதளமாக செருப்பு போடுவதும், பாதங்கள், முதுகுத் தண்டில் பிரச்னையை ஏற்படுத்தும்.

'ஹீல்ஸ்' வைத்த செருப்பும் போடக் கூடாது; சமதளமாக இருப்பதும் பயன்படுத்தக் கூடாது எனில், செருப்பு எப்படி இருக்க வேண்டும்? குதிகால் பகுதியில், அதிகபட்சம், 3 அங்குல உயரத்துடன், ஹீல்ஸ் உள்ள செருப்புகளை அணியலாம்.

குறைந்தபட்சம் அரை அங்குல அளவு ஹீல்ஸ் வைத்த செருப்பாக இருக்க வேண்டும்.

மூன்று அங்குலத்திற்கு மேல் உயரம் உள்ள செருப்பு மற்றும் சமதளமாக உள்ள செருப்புகளை அணிவதால், சற்றே வளைந்து இருக்கும் முதுகெலும்பு பாதிக்கப்படுவதோடு, இயல்பான வடிவமும் மாறும்.

மேலும், குதிகால், இடுப்பு பகுதிகளில் உள்ள தசைகள், தளர்வாகி விடும்.

ஹீல்ஸ் இல்லாமல், சமதளமாக இருக்கும் செருப்புகளை அணிந்தால், பாதத்தில் சேர வேண்டிய கொழுப்பு சேராது. இயல்பாகவே பாதத்தின் நடுவில் ஒரு வளைவு இருக்கும்; அந்த உடம்பின் எடையை தாங்கி, முதுகுத் தண்டு, இடுப்பு, கணுக்கால் போன்றவற்றில் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.

அதிக ஹீல்ஸ் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பாதத்தில் கொழுப்பு சேருவது தடைபடும்.

பாதங்களை சிரமப்படுத்தாத, நல்ல குஷன் உள்ள செருப்புகளை தேர்வு செய்ய வேண்டும். அழகு, பேஷனை காட்டிலும், பாதத்தின் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர வேண்டும். தவறான செருப்பு போடுவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு, இயற்கை மருத்துவத்தில் யோகா, நீர் சிகிச்சை உட்பட பல தீர்வுகள் உள்ளன.

டாக்டர் ஒய்.தீபா,

'நேச்சுரோபதி' சென்னை.

sakshaayaan@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us