sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/வலி நீக்கும் தபசு முருங்கை

வலி நீக்கும் தபசு முருங்கை

வலி நீக்கும் தபசு முருங்கை


PUBLISHED ON : பிப் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருவருக்கு சளி, இருமல் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. வந்தால் அதை சமாளிப்பதுதான் சிரமமான காரியம். மாத்திரை, டானிக் என்று எதை சாப்பிட்டாலும் உடனடி நிவாரணம் கிடைக்காது.

இவை எப்போது நம்மை அண்டாமல் இருக்க இயற்கை மருத்துவம்தான் ஒரே வழி. இதற்கு இயற்கையாக கிடைக்கும் தபசு முருங்கையே சிறந்த மருந்தாகும். இது, அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மூலிகையாகும்.

காடு கரைகளிலும், வயல்வெளிகளில் மிக எளிதாக கிடைக்கும் மூலிகை. பக்கவிளைவில்லாத பயனுள்ள மருந்தாக தபசு முருங்கை உள்ளது. சளி, இருமல் பிரச்னையை தீர்ப்பதோடு, அரிப்பு, தடிப்பு போன்ற தோல் நோய்களை குணப்படுத்தவும் வல்லது. உடலில் ஏற்படக் கூடிய கொப்புளம், கட்டிகளை கரைக்கும்

ஆற்றல் இதற்கு உண்டு. வலியை போக்கி வீக்கத்தை வற்றச் செய்யும். சுவாசப்பாதையில் ஏற்படும் அடைப்பை நீக்கக்கூடியது. விஷத்தை முறிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

சாலையோரங்களில் காணப்படும் இது, தும்பைப்பூ போன்ற உருவத்தை கொண்டது. இதை புண்ணாக்கு பூண்டு என்றும் சொல்வார்கள். பல்வேறு நன்மைகளை உடைய தபசு முருங்கையை பயன்படுத்தி சளி, இருமல், மூச்சிரைப்பை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தபசு முருங்கை இலை சாறு, சுக்குப்பொடி, உப்பு பயன்படுத்தி எளிய மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து, 20 முதல் 30 மில்லி வரை தபசு முருங்கை இலை சாறு, உப்பு சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் சளி, இருமல், மூச்சிரைப்பு பிரச்னை குணமாகும்.

இந்த தேனீர் சுவாசப் பாதையில் உள்ள அடைப்பை சரிசெய்யும். கரையாத நெஞ்சு சளியை கரைத்து வெளியேறும். துளசியை போன்ற அமைப்பை உடைய தபசு முருங்கையை பயன்படுத்தி கட்டிகளை கரைக்கும் மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுத்து, இதனுடன் தபசு முருங்கை இலை பசையை சேர்த்து வதக்கி கட்டிகளின் மீது பற்றாக போட்டால் கட்டிகள் வெகு விரைவில் கரைந்து போகும். அடிபட்ட இடங்களில் இதை போடும்போது ரத்த நாளங்கள் சிதைந்துபோன நிலைகூட சரியாகும்.

கல் போன்று கரையாமல் இருக்கும் கட்டிகள் மீது வைத்து கட்டுவதன் மூலம் கட்டிகள் கரையும். கட்டிகளால் ஏற்படும் வீக்கம், வலி சரியாகும். அற்புத மூலிகையாக விளங்கும் தபசு முருங்கையை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு மற்றும் தொற்றுக்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுத்து, இவற்றுடன், அரைத்து வைத்திருக்கும் தபசு முருங்கை இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி பயன்படுத்த தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு சரியாகும்; தொற்று நோய்கள் வராது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us