sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/உடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை

உடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை

உடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை


PUBLISHED ON : மார் 15, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2015


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உலர் திராட்சையை பாயசத்தில் போட்டு சாப்பிட்டால், சுவை அட்டகாசமாக இருக்கும் என்பதை மட்டும் அறிந்தவரா நீங்கள்? மேலே படியுங்கள்.

உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் வைட்டமின்கள், அமினோ அமிலங்களும் உடலுக்கு சக்தியை அளிக்கின்றன. தடகளப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேவையான, உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. எனவே விளையாட்டு வீரர்களுக்கு, பயிற்சியின் போது சாப்பிடக்கூடிய ஊக்கமளிக்க கூடிய உணவாக, இது வழங்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலர் திராட்சையில் உள்ள கால்சிய சத்து, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால் காய்ச்சும் போது, அதில் இரண்டு பழத்தை போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் உடல் பலம் உண்டாகும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள்.

ஐம்பது பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால், காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை, உலர் திராட்சையைச் சாப்பிட்டு வந்தால், காமாலை நோய் குணமடையும். மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்கு பின்னர், காலையிலும், மாலையிலும், 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து, 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

உலர் திராட்சையில் உள்ள தாமிரச்சத்துக்கள், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எனவே, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள், தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us