PUBLISHED ON : பிப் 07, 2016

மீன் கறியை மண் சட்டியில் வைத்தால், சுவை சிறப்பாக அமைவதுடன், ரத்த கொதிப்பு அதிகரிக்க வாய்ப்பில்லை என, சித்தா மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக, மண் சட்டியை அடுப்பில் வைக்க, பலரும் பயப்படுவது உண்டு. மண் சட்டி வாங்கியதும்,
சாதம் வடித்த கஞ்சி தண்ணியை சட்டியில் ஊற்றி, சிறு சூட்டில் கொதிக்க வைத்து, ஒரு வாரம் பழக்கினால், சட்டி உடையாது.
அதன்பின்பு, முதலில் சட்டியில் தேங்காய் அரைத்து வைத்த கரைசல், பொடிகள் , தக்காளி, புளி கரைசல் சேர்த்து, மீன் துண்டுகளை அத்துடன் இட்டு, நன்றாக கொதிக்க விடவும். கறி வற்றி, மசாலா சேர்ந்து வந்ததும், வேறு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
பின்பு தேங்காய் எண்ணெய்அல்லது சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு இடவும். கடுகு கரியாக பொரிந்ததும், வெட்டி வைத்துள்ள வெங்காயம் அரைத்து வைத்துள்ள இஞ்சி, வெள்ளப்பூண்டு விழுது, குறுக்கே கீறிய பச்சை மிளகாய் 4, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
கொதித்த மீன் குழம்பில், இவற்றை கொட்டி மூடி வைத்தவுடன் அடுப்பையும் அணைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழிந்து இதமான சூட்டில் சாதம் சப்பாத்தி, தோசை அல்லது, இடியாப்பத்துடன் சேர்த்து ஒரு பிடி பிடித்து விடலாம்.
இத்தகைய மண் சட்டியில் சமைத்த குழம்பினால், ரத்த கொதிப்பு அதிகரிக்காது என, சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

