தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பீன்ஸ் சாப்பிடுங்க கர்ப்பிணிகளே!

பீன்ஸ் சாப்பிடுங்க கர்ப்பிணிகளே!

பீன்ஸ் சாப்பிடுங்க கர்ப்பிணிகளே!


PUBLISHED ON : ஜூன் 21, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கத்திய நாடுகளில் வசிப்பவர்கள், காய்கறிகளில் பீன்சை விரும்பி சாப்பிடுகின்றனர். அதற்கு காரணம், அதில் உடலுக்கு நன்மை அளிக்க கூடிய பல சத்துக்கள் உள்ளன.

பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை தடுத்து, நீரிழிவை கட்டுப்படுத்துகிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, பீன்ஸ் பெரிதும் உதவியாக உள்ளது. அதில் உள்ள கார்போஹைட்ரேட், மெதுவாக கரைவதால், அது ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கிறது. பீன்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான பொட்டாசியம், போலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

பீன்சில், கருவில் வளரும் சிசுவுக்கு தேவையான வைட்டமின் இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது. பீன்சில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல்

தடுக்கும்.

சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால், அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால், தானியங்களால் கிடைக்கக்கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம்.

பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து, எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மற்ற காய்கறிகளை விட, இந்த காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.

பீன்சை சமைத்து சாப்பிடுவதை விட, அப்படியே பச்சையாக சாப்பிடுவது கூடுதல் பலன் தரும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் சேர்வதால், மலச்சிக்கல் வராது. மலச்சிக்கல் இல்லை என்றாலே, பல நோய்கள் தாக்காமல் தப்பலாம். பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுகளான லுடீன், நியோசாந்தைன், பீட்டா கரோட்டீன் மற்றும் வியோலா சாந்தைன், சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்து போராடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us