sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கொழுப்பை குறைக்கும் கத்தரிக்காய்!

/

கொழுப்பை குறைக்கும் கத்தரிக்காய்!

கொழுப்பை குறைக்கும் கத்தரிக்காய்!

கொழுப்பை குறைக்கும் கத்தரிக்காய்!


PUBLISHED ON : செப் 24, 2017

Google News

PUBLISHED ON : செப் 24, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளில், கத்தரிக்காயும் ஒன்று. வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் திறன் கொண்டது கத்தரிக்காய். குறிப்பாக, நாட்டு கத்தரிக்காய், நல்ல மருத்துவ குணம் உடையது. அதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

குறையும் கொழுப்பு சத்து: கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து, பொட்டாசியம் சத்து, ரத்தத்தில் சேரும் கொழுப்பு சத்தை குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருத்துவம். இதிலிருக்கும் நார்ச்சத்து, பசியை அடக்கி வைப்பதால், உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.

புத்துணர்வை தரும்: கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள், உடலின் சோர்வைப் போக்கி, புத்துணர்வை தரக்கூடியது, அது மட்டுமின்றி, ஆன்தோ சயனின், புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு, மேலும் பரவாமல் தடுக்கிறது.

கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது; அது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது. நிறைவான தூக்கத்தை கொடுக்கும்; கத்தரிக்காயை வேக வைத்து, அத்துடன் போதிய தேன் சேர்த்து, மாலை நேரத்தில் சாப்பிட்டால், இரவில், வழக்கமான நேரத்துக்கு முன்னரே, தூக்கம் பிடிக்கும். தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு, நல்ல தீர்வை தரும்.

இதய பாதுகாப்பு: கத்தரிக்காயில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள், ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்பு சத்தை குறைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால், மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது. பிஞ்சு கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயனின் வேதிப்பொருள் வயது முதிர்வை தடுத்து, இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.

கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள், தோலில் ஏற்படும் புற்றுநோயை தடுத்து தோல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பிஞ்சாக சாப்பிடுவதே நல்லது. குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும்.

நீர்சத்து, இரும்பு சத்து, நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள், ஏ, சி, பி1, பி2 சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.

கத்தரிக்காய், உடலுக்கு சூடு தரும் காய்கறி வகையை சேர்ந்தது. எனவே, உடம்பில் சொறி, சிரங்கு, புண் உள்ளவர்கள், இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தக்காளியைப் போலவே, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் செரித்து சத்தாக மாற, கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் பி பயன்படுகிறது. வாயுவை தடுத்து, பசியின்மை போக்குகிறது. உடல் வலு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்து விடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.

100 கிராம் கத்தரிக்காய், உடலுக்கு, 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது, 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.

இதிலுள்ள மெட்டபாலிசம் ஸ்பைக் கலோரிகளை எரிக்க வல்லது, எனவே கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை தானாகவே குறையும்.






      Dinamalar
      Follow us