sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

வாழ்வளிக்கும் ஆழ்மூளை தூண்டுதல் சிகிச்சை

/

வாழ்வளிக்கும் ஆழ்மூளை தூண்டுதல் சிகிச்சை

வாழ்வளிக்கும் ஆழ்மூளை தூண்டுதல் சிகிச்சை

வாழ்வளிக்கும் ஆழ்மூளை தூண்டுதல் சிகிச்சை


PUBLISHED ON : அக் 20, 2019

Google News

PUBLISHED ON : அக் 20, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆழ்மூளை துாண்டுதல் என்றால் என்ன?

நம் மூளையில் பாதிப்பிற்குள்ளான பகுதியை சிறிய பேஸ்மேக்கர் கருவி மூலம் சீர் செய்வதே ஆழ்மூளை துாண்டுதல் ஆகும். குறைந்தது 3 ஆண்டுகள் பார்கின்சன் நோய்க்கு மருந்து எடுத்தப்பிறகும் பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வராமல் இருப்பது, கட்டுப்பாடற்ற நடுக்கம் தொடர்ந்து இருப்பது, அத்தியாவசிய நடுக்கம், டிஸ்போனியா போன்ற பாதிப்புகளுக்கு ஆழ்மூளை துாண்டுதல் சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.

* சிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படும்

இச்சிகிச்சையின் போது தலையை அசைக்காமல் இருக்க வேண்டும். இதற்காக தலை சட்டகம் பொருத்தப்படும். சிகிச்சையின் பெரும் பகுதி நோயாளிகள் விழித்திருப்பர். வலி தெரியாமல் இருக்க சிறிதளவு மயக்க மருந்து கொடுக்கப்படும்.

பின்னர் மூளையை வரைபடப்படுத்தவும், எலக்ட்ரோடு கம்பியை எங்கு வைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவும் ஸ்கேன் செய்யப்படும். திட்டமிடலுக்கு பிறகு ஒரு மெல்லிய கம்பியை மூளையின் உட்செலுத்தி அதை சிறிய பேஸ்மேக்கர் கருவியுடன் டாக்டர்கள் இணைப்பர். இது மின்னணுக்களை உள்ளே செலுத்தி நோயை கட்டுப்படுத்தும்.

இந்நோய்கள் மருந்து மூலம் சரியாகாதா?

மருந்துகளுடன் ஒப்பிடும்போது ஆழ்மூளை துாண்டுதல் ஒவ்வொரு நாளும் அசாதாரண இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. நாம் அன்றாடம் செய்யும் நடவடிக்கைகளான குளித்தல், உடை அணிதல், சாப்பிடுதல், எழுதுதல், ஓய்வறையை பயன்படுத்துதல் போன்றவற்றை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

இச்சிகிச்சை முறையால் மருந்துகளின் அளவை குறைக்க முடியும். இது குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், தேவையற்ற இயக்கங்கள் போன்ற மருந்து தொடர்பான பக்க விளைவுகளை குறைக்க உதவும். பேஸ்மேக்கர் மூலம் படிப்படியாக நோயின் அறிகுறிகள் கட்டுப்படுத்தப்படுவதால் இயல்பு வாழ்க்கையை இச்சிகிச்சை முறையில் உறுதி செய்யலாம்.

- டாக்டர் ஷியாம்

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை

63802 71088.







      Dinamalar
      Follow us