sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/வயிற்றுக்கு ஒத்தடம்!

வயிற்றுக்கு ஒத்தடம்!

வயிற்றுக்கு ஒத்தடம்!


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெண்பூசணி, வயிறு சம்பந்தமான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது. இதைக் கொண்டு, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. சாறாக குடித்தால், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.

சமைத்துச் சாப்பிட்டால், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண் உட்பட நோய்கள் தீரும்; உடல் சூட்டை தணிக்கும். உடல் நோவு உள்ளவர்கள், பூசணிக்காயை

அடிக்கடி சமைத்து சாப்பிட்டால், உடல் வலி தீரும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுசளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.

ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் வெள்ளைப்பூசணி நல்லது. இதன் சாறு, 50 மி., எடுத்து, ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால், இருதய பலவீனம் நீங்கும்.

இருமல் குறையும்

பூசணிக்காய் சாறை, தினசரி 50 மி., சாப்பிட்டு வந்தால், தொடர் இருமல், குணமாகும். காலையும், மாலையும் சாறு குடித்து வந்தால், வலிப்பு நோயின் தீவிரம் குறையும். பூசணிக்காயின் விதைகளை சேகரித்து, நன்கு காய வைத்து பொடியாக செய்து, ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்; உடல் சூட்டைத் தணிக்கும்; அதிகமான பித்தம் கட்டுப்படும்.

பூசணி சாறு, உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும். உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் வயிற்று புண், வாய்ப்புண், மூலம், சிறுநீர் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து.

எடை பிரச்னைக்கு தீர்வு

சாறு, ரத்தத்தில் காரத்தன்மையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்வோர், தினமும் காலை ஒரு டம்ளர் வெண்பூசணி சாறு பருகலாம். புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இந்த சாறு பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். உடல் சூடு குறையும்; உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி பெறும்.

சர்க்கரை நோயாளிகள், இந்த சாற்றில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருக வேண்டும். பூசணி விதைகளை காயவைத்து, பொடி செய்து, அந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டால், நமது உடலின் வலிமை அதிகரிக்கும்.

பூசணி விதையில் உள்ள துத்தநாகச் சத்துக்கள், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆண்மையின்மை பிரச்னையை குணப்படுத்துகிறது. பெண்கள், பூசணி விதையை நெய்யில் வறுத்து, தினமும் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

பூசணி விதையை பொடி செய்து, பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறையும். பூசணி விதையில் கஷாயம் செய்து குடித்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.

பூசணி விதையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள், நமது உடம்பில் ரசாயன தாக்கத்தை தடுத்து, ஹார்மோன் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தி, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. தினமும் ஒரே வகையான காய்கறிகளை மாற்றி, மாற்றி சமைத்து உண்ணாமல், இதுபோன்ற காய்கறிகளை, வாரத்துக்கு இரு முறை எடுத்துக் கொண்டால், ஒட்டு மொத்த குடும்பத்தின் நலனுக்கு ஏதுவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us