தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பெண்களுக்கு நன்மை தரும் உடற்பயிற்சி நேரம்!

பெண்களுக்கு நன்மை தரும் உடற்பயிற்சி நேரம்!

பெண்களுக்கு நன்மை தரும் உடற்பயிற்சி நேரம்!


PUBLISHED ON : மார் 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, இதயக் கோளாறுகள், பக்கவாதம் வரும் அபாயம் மிகக் குறைவாக இருப்பதாக, மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதய ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் என்ற அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆறு - எட்டு ஆண்டுகள் கண்காணித்ததில், 2,911 பேருக்கு, கொரோனரி ரத்தக் குழாய் எனப்படும் தமனியில் கோளாறும், 796 பேருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. பங்கு பெற்ற மொத்த நபர்களில், காலை 6.00 - 11.00 மணி வரை யார் சுறுசுறுப்பாக இருந்தனரோ, அவர்களுக்கு இதயக் கோளாறு, பக்கவாதம் வரும் அபாயம் குறைவாக இருந்தது. அதிகாலை அல்லது காலையில் உடல் உழைப்பு செய்தவர்களுக்கு 11 சதவீதம் மற்றும் 16 சதவீதம், கொரோனரி ரத்தக் குழாய் கோளாறு வரும் அபாயம் குறைந்து இருந்தது. காலை 9:00 மணிக்கு மேல் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு 17 சதவீதம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

காலையில் உடற்பயிற்சி செய்வது, பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதும் உறுதியானது. இதனால், கொரோனரி ரத்த நாளக் கோளாறு வருவது 22 - 24 சதவீதமும், பக்கவாதம் வரும் அபாயம் 35 சதவீதமும் குறைவாக இருந்தது.

- தி யுரோப்பியன் ஜர்னல் ஆப் பிரிவென்டிவ் கார்டியாலஜி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us