sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கண் நோய் தீர்க்கும் தாமரை

/

கண் நோய் தீர்க்கும் தாமரை

கண் நோய் தீர்க்கும் தாமரை

கண் நோய் தீர்க்கும் தாமரை


PUBLISHED ON : பிப் 11, 2018

Google News

PUBLISHED ON : பிப் 11, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாமரையின் இலை, தண்டு, பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கண் நோய்களுக்கு, தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன. பசும்பால், 100 மி., சுத்தமான நீர் 100 மி., சேர்த்து, அதில் தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சி இறக்கி வைத்த பின் வரும் ஆவியை, பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி காலை, மாலை, இருவேளை செய்து வந்தால், கண் குறைபாடுகள் நீங்கும். இதற்கு, செந்தாமரை பூவின் இதழ்கள் நல்லது.

தாமரைப்பூவின் இலை, தண்டு கிழங்கு இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து, அரைத்து சாறெடுத்து, சுத்தமான நல்லெண்ணெய், 750 மி., கலந்து காய்ச்சினால், சிவப்பு நிறம் வரும். இந்த பக்குவத்தில் இறக்கி, ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதை தலையில் தடவி, வாரம் ஒரு முறை குளித்து வந்தால், கண் பார்வை சீராகும்.

தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து, பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால், உடல் சூடு தணியும்; பித்தம் குறையும். காய்ச்சலுக்கும் இதை கொடுத்து வந்தால், படிப்படியாக குறையும்; ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.

வயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும். இருதயத்தை பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். தாமரைப் பூவை, நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப்போக்கு ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கும்.

தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை தெளிவுபெறும். மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால், அது பலவகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளை குறைக்க, தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து, குடிநீராக தினமும் அரை டம்ளர் அளவு அருந்தி வந்தால், ஒவ்வாமையால் உண்டான பாதிப்பு குறையும்.

தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அதை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு, இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் குடித்து வர, வறட்டு இருமல் குணமடையும். தாமரை விதையை தேன் விட்டு அரைத்து, நாக்கில் தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.

மூன்று வாரங்களுக்கு, தொடர்ந்து, வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர, மூளை நரம்புகள் பலம் பெறும். இருதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க, வெண்தாமரை பூ கஷாயம் ஏற்றது. தினம், மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட, ஜன்னி நோய் குணமாகும்.

வெண்தாமரை மலர்களை காய வைத்து பொடியாக்கி, தினமும், ஐந்து டீஸ்பூன் பொடியை, ஒன்றரை டம்ளர் நீரில் இட்டு சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி, பால், சர்க்கரை சேர்த்து, தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும். தாமரைப்பூ, அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து பால்விட்டு அரைத்து, கலவையாக எடுத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு, இக்கலவையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை, தலையில் பூசி வர, இளநரை மறையும்; முடி உதிர்வது நிற்கும்.






      Dinamalar
      Follow us