sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சளி பிரச்னைக்குஇதோ தீர்வு

சளி பிரச்னைக்குஇதோ தீர்வு

சளி பிரச்னைக்குஇதோ தீர்வு


PUBLISHED ON : செப் 06, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2015


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தூசு, புகை, அசுத்தமான தண்ணீர் இவற்றால், இன்று சளி, இருமல் பிரச்னைகள் சர்வ சாதாரணமாகி விட்டன. அடிக்கடி சளி, இருமல் ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பதை தடுக்க, துளசி மற்றும் கற்பூரவள்ளி இலைகளை போட்டு, கொதிக்க வைத்த தண்ணீரில், குளிக்க வேண்டும். குளித்த பின், தலையில் தண்ணீர் முழுமையாக போகும் வகையில் துடைக்க வேண்டும்.

சளி பிடித்து பாதிக்கப்பட்டால், வீட்டில் கிடைக்கும் கஸ்தூரி மஞ்சள், படிக்காரம், மிளகு ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்து பவுடராக்க வேண்டும். அதனை, வெள்ளை துணியில் தூவி அதனை திரியாக மாற்றி, ஒரு முனையை தீயில் எரிய விட்டு அணைக்க வேண்டும். பின், அதிலிருந்து வரும் புகையை மூக்கு வழியாக உள்ளே இழுத்து வெளியே விட்டால், சளி வெளியேறி விடும்.

சூடான ஒரு கிளாஸ் பசும்பாலில் மிளகு, மஞ்சள் தூளை சிறிது போட்டு அதனை சூடாக்க வேண்டும். பின், அதில் பனங்கற்கண்டு போட்டு, அரை கிளாஸ் வற்றும் வரை கொதிக்க வைத்து, குடித்தால் சளியிலிருந்து விடுபடலாம்.

துளசி, கற்பூர வள்ளி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.

வலி நிவாரணம்: தோல் நீக்கிய இஞ்சியுடன் சர்க்கரை சேர்த்து மையாக அரைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து, சிறிய வெட்டு காயங்களில் வைத்து கட்டினால், சீழ் பிடிக்காமல் காயம் ஆறி விடும். ஒரு கிளாஸ் சாதாரண குளிர்ந்த நீரில், சிறிது

சர்க்கரை போட்டு கலக்கி அதனை குடித்தால், சூடு காரணமாக அடி வயிற்றில் ஏற்படும் வலி நின்று விடும்.

பிளாக் டீயில் சிறிய எலுமிச்சை துண்டை போட்டு, அதனை குடித்தால் உடல் சூடு தணியும். பிரியாணி சாப்பிட்ட பின்னும் இதனை குடிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us