sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்

புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்

புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்


PUBLISHED ON : ஜன 02, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2011


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் சாப்பிடும் உணவு, உள்ளே இறங்கும் போது, தவறான பாதையில் நுழைந்துவிட்டால், உள்ளிழுக்க வேண்டிய மூச்சு தடைபட்டு, திணறல் ஏற்படும். மூச்சுத்திணறல் ஏற்பட்டால், 40 வினாடிகளில் மயக்கம் ஏற்பட்டு, நான்கு நிமிடங்களில் மரணமே ஏற்பட்டு விடும். உடனடி மருத்துவ சிகிச்சை செய்து, உயிர் காப்பாற்றப் பட்டாலும், மூளையில் நிரந்தர பாதிப்பு ஏற்படும்.

சாப்பிடும் போது, இதுபோன்ற மூச்சுத்திணறலை பெரும்பாலானோர் சந்திக்கின்றனர். கண்கள் சிவப்பாகி, காற்றை உள்ளிழுக்கும் வகையில், வேகமாக மூச்சிழுப்பர். தொடர்ந்து, பெரிய அளவில் இருமல் ஏற்படும். பேச முடியாமல், தொண்டையைப் பிடித்து கொள்வர். உடலில் ஆக்சிஜன் குறைந்து, முகம் நீல நிறமாகி விடும். பின், இருமல் மெதுவாக குறைந்து, மயக்கம் ஏற்படும். உடனடி மருத்துவ உதவி கிடைக்காவிட்டால், உயிரிழக்க நேரிடும்.

புரை ஏறும்போது, அருகில் நிற்பவர்கள், முதுகில் தட்டி, அதை சரி செய்ய முயல்வர். இது பெரும்பாலும் ஆபத்தில் முடியும். முதுகில் வேகமாக தட்டும் போது, உணவு துகள்கள் வெளியேறலாம் அல்லது மூச்சுக்குழாயில் மேலும் இறங்கி விடலாம். இது, அரைகுறை அடைப்பை முழுமையாக்கி விட்ட கதையாகி விடும். தண்ணீர் குடிக்க சொல்வது, வாழைப்பழம் அல்லது வேறு திட உணவுகளை சாப்பிடச் சொல்வது, பிரச்னையை மேலும் சிக்கலாக்கி, ஆளை பலி வாங்கி விடும். சம்பந்தப்பட்ட நபர் மயக்கமடையாமல் இருந்து, தொடர் இருமி, நன்றாக மூச்சு விட்டு, பேசிக் கொண்டிருந்தார் என்றால், அவரை கீழே குனிய வைத்து, இன்னும் அதிகமாக இருமச் சொல்ல வேண்டும். உள்ளங்கையால், மேல் முதுகை தட்ட வேண்டும். ஐந்து தட்டுதலுக்கு பின்னும், நிலைமை சீராகவில்லை எனில், டாக்டர் ஹீம்லிச் கோட்பாட்டை பின்பற்ற வேண்டியது தான்.

டாக்டர் ஹென்றி ஹீம்லிச், இருதய சிகிச்சை நிபுணர். புரை ஏறினால் என்ன செய்வது என்பது குறித்து, 1976ல் ஒரு கோட்பாட்டை வகுத்தார். எனவே, அந்தக் கோட்பாடு, அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. முதலுதவி வகுப்புகளில் இந்த கோட்பாடு செய்யப்படுகிறது. ஆனால், இதை கற்றுக் கொள்ள அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை.

ஒரு வாலிபர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டால்...

* அவருடைய பின்புறம் நின்று, பின்னாலிருந்து இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

* அதே நிலையில் நின்று, அவருடைய விலா எலும்புகள் நடுவில் முடியும் இடத்தின் கீழே, தொப்புளுக்கு மேலே ஒரு குத்து விடுவது போல், கையை மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* அப்படியே மேல் நோக்கி வேகமாகக் கையை அழுத்தவும். விலா பகுதியைப் பிழிந்து விடாதீர்கள். கவனமாகச் செய்ய வேண்டும்.

* உணவுப் பொருள் வெளியேறும் வரை இப்படி செய்யலாம். படிக்கும் போது இது எளிதாக தென்படும். தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே, எளிதாக செய்ய முடியும். இல்லையெனில், உங்கள் பின்னால் நின்று கொண்டிருப்பவரையும் சேர்த்து உதைப்பீர்கள்!

* புரை ஏறிய நபர் கர்ப்பிணியாகவோ, அதிக எடை கொண்டவராகவோ இருந்தால், அவரை பின்புறத்திலிருந்து கட்டிப் பிடிக்க முடியாது. அவருடைய இரு கைகளின் கீழ் வழியே உங்கள் இரு கைகளையும் நுழைத்து, மார்புப் பகுதிக்குக் கீழ் லேசாக மேல் நோக்கி அழுத்தி, கீழிறக்க வேண்டும்.

நினைவிழந்தவர்களையோ, நிற்க முடியாதவரையோ, வேறுவிதமாக கையாள வேண்டும்.

* அவர்களை நெடுஞ்சாண்கிடையாகப் படுக்க வைக்க வேண்டும்.

*அவருடைய இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் உங்கள் கால்களை முட்டி போட்டு, உங்கள் எடை அவர் மீது விழாதவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

* வலது கை மீது இடது கையை வைத்து கொள்ளுங்கள். விலா எலும்பின் கீழ், தொப்புளின் மேல்புறத்தில் வலது உள்ளங்கையின் கீழ் பகுதியால் மேல் நோக்கி அழுத்துங்கள்.

* உங்கள் உடல் எடை இதற்கு உதவும்.

* உணவுத்துகள் வெளியே வரும் வரை இதை செய்யலாம். நீங்கள் தனியாக இருக்கும் போது, புரை ஏறி, மூச்சுத்திணறல் வந்தால் பயப்படாதீர்கள்.

* வேறொருவர் உங்கள் வயிற்றில் மேல் நோக்கி அழுத்தம் கொடுப்பது போலவே, நீங்களே உங்கள் கையால் அழுத்தம் கொடுத்து மேலேற்றலாம். உணவுத் துகள் வெளியேறும் வரை, இதைச் செய்து கொள்ளலாம்.

* மேஜையின் முனை அல்லது அதைப் போன்ற பொருட்கள் மீது உங்கள் வயிற்றை (அதாவது, விலா எலும்பு மற்றும் தொப்புளுக்கு இடைப்பட்ட பகுதி) வைத்து அழுத்தி, அழுத்தத்தை மேலே ஏற்றுவது, துகளை மிக எளிதாக வெளியே எடுக்கும் யுக்தியாக அமையும்.

குழந்தைகளும் இதுபோன்று ஏதாவது பொருட்களை விழுங்கி, சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.

குழந்தை 1 வயதுக்கும் குறைவாக இருந்தால்:

* குழந்தையின் முகத்தை மேஜை போன்ற தட்டையான பகுதியில் வைத்து, குழந்தையை மடியில் வைத்து கொள்ளுங்கள். உங்கள் இரண்டு கைகளின் சுட்டு விரல் மற்றும் நடுவிரல்களை, விலா எலும்புகளுக்குக் கீழ் வைத்து, மேல் நோக்கி அழுத்துங்கள். விலா எலும்புகளை அழுத்தி விடாதீர்கள்; உடைந்து விடும்.

* குழந்தையின் உள்ளே சென்ற பொருள் வெளியே வரும் வரை இதை செய்யலாம். குழந்தை ஏதாவது விழுங்கி விட்ட உடன், நாமும் பதறி அடித்து, குழந்தையின் வாயில் கையை நுழைத்து, அதை வாந்தி எடுக்க வைக்க முயற்சி செய்வோம். இந்த செய்கையால், குழந்தை வாயினுள் சென்ற பொருள், மேலும் தாறுமாறாக உள்ளே நகருமே தவிர, வெளியே வராது. இதுபோன்ற, வாழ்வைப் பாதுகாக்கும் எளிய நடைமுறைகளுக்கு கருவிகள் ஏதும் கிடையாது. டாக்டர் ஹீம்லிச், அவர் பெயரில் ஒரு மையம் துவக்கி, இதுபோன்ற ஆராய்ச்சிகளை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற படிப்புகள் நமக்கு இங்கு கிடைப்பதில்லை. கருவிகள் நோய்களை தீர்ப்பதில்லை; வாழ்க்கையை பாதுகாப்பதில்லை; மனிதர்கள் தான்!

சில சந்தேகங்கள்... சில பதில்கள்! ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்ன வழி?

ஹரி சங்கர், சென்னை: உயர் ரத்த அழுத்தத்திற்கென எனலப்ரில் மருந்து சாப்பிடுகிறேன். இது சாப்பிட துவங்கியதும், எனக்கு இருமல் ஏற்படுகிறது. எவ்வளவு கிருமி எதிர்ப்பு மருந்துகள் சாப்பிட்டாலும், இருமல் குறையவில்லை... பாக்டீரியா தொற்று இருந்தால் மட்டுமே, கிருமி எதிர்ப்பு மருந்து சாப்பிட்டால், இருமல் சரியாகும். காய்ச்சல் இல்லாத தொடர் இருமல் ஏற்படுவதற்கு, ஒவ்வாமை தான் பெரும்பாலும் காரணமாக இருக்கும். கொசு விரட்டிகள், அறை தெளிப்பான்கள், ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். சில நேரங்களில், எனலப்ரில் மருந்து இருமலை ஏற்படுத்தும். மாலை நேரத்தில், வைட்டமின் சி - 500 மி.லி., சாப்பிடுங்கள். இது இருமலை கட்டுப்படுத்தும். அப்படியும் இருமல் சரியாகவில்லையெனில், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். அவர் வேறு மாத்திரை பரிந்துரைப்பார்.

ஆனந்தி, முகப்பேர்: எனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. நல்ல நிறம் கொண்ட குழந்தை பிறக்க என்ன செய்வது?

குழந்தையின் நிறம் குறித்து கவலைப்படுவதை தவிர்த்து, ஆரோக்கியமான குழந்தை பெறுவது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். திருமணத்திற்கு முன், அனைத்து பெண்களுமே, ஹெப்பாடைட்டிஸ் பி (மூன்று முறை), ருபெல்லா (அம்மை) ஆகியவற்றுக்கான தடுப்பூசி போட வேண்டும். மூளை மற்றும் முதுகு தண்டு ஆகியவை நன்றாக வளர உதவும் வகையில், பாலிக் அமிலம் 5 மி.லி., தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 40 நிமிட நடைபயிற்சி, உடலுக்கு தெம்பு கொடுத்து, காலுக்கு வலுவூட்டும். இவை அனைத்தும், ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கு வழி வகுக்கும் பொதுவான வழிமுறைகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us