sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/பலம் தரும் கீரை தண்டு சூப்

பலம் தரும் கீரை தண்டு சூப்

பலம் தரும் கீரை தண்டு சூப்


PUBLISHED ON : மே 24, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2015


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சமையலுக்கு கீரை வாங்குவோர், கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் தண்டுகளை குப்பையில் போட்டு விடுகின்றனர். உண்மையில், கீரைத்தண்டில் தான் அதிக சத்துக்கள் உள்ளன.

கீரைத் தண்டை துண்டுகளாக நறுக்கி, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள் சேர்ந்து வேக வைத்து, சாற்றை வடிகட்டி சூப்பாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சளி மற்றும் இருமலுக்கு நல்லது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் காணாமல் போகும்.

கீரைத்தண்டின் சுவை, விளைகின்ற இடத்துக்கு ஏற்றபடி மாறுபடும். கீரைகளில் சில, நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால், மேல் தோலை மட்டும்

சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.

கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது, மலத்தை நன்றாக இளக்குவதுடன், சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றுடனும் சேர்த்து சமைக்கலாம்.

வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும். காய்கறி வகைகளிலே, கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்து கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து, சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதில், கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும்; விலையும் குறைவு. இதில், பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு, கீரைகளில் அற்புதமான மருத்துவக் குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு, அனைவருக்கும் ஏற்றது. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர் தான் மாற்ற வேண்டும்.

சின்ன வயதில் இருந்தே, குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும். வீட்டு சமையலில் வாரத்தில் இரண்டு நாட்கள் கீரை பதார்த்தம் இடம் பெற்றால், அல்சர் போன்ற குடல் சம்பந்தமான நோய்கள் வராது. மலிவாகத் தானே கிடைக்கிறது; இதில் எங்கே சத்து இருக்கப் போகிறது என்ற கருத்து, நேற்று வரை உங்கள் மனதில் இருந்தாலும், அதை உடனடியாக அகற்றி, கீரை உட்கொள்வதை நடைமுறைப்படுத்துங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us