தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/புதிய அரிசி, கோதுமை ரொம்ப கெடுதல்!

புதிய அரிசி, கோதுமை ரொம்ப கெடுதல்!

புதிய அரிசி, கோதுமை ரொம்ப கெடுதல்!


PUBLISHED ON : ஏப் 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெல்லம், சர்க்கரை, புதிய அரிசி, கோதுமை, மாவுப் பண்டங்கள், எருமைப் பால், தயிர், கடல் உணவுகள், கொழுப்பு, மாமிசம் போன்றவற்றை தொடர்ந்து அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி, உழைப்பு இல்லாமல் பகலில் துாங்குவது.

குஷன் சோபா, மெத்தையில் எப்போதும் அமர்வது, அதிலேயே படுத்து துாங்குவது, எந்தவிதமான வேலையும் சிந்தனையும் இல்லாமல் சாப்பிடுவது, உறங்குவதுமாக சோம்பேறியாக இருப்பது, அதிக கவலை, பயம், துக்கம் முதலியவை சர்க்கரை கோளாறுக்கான காரணங்கள்.

இனிப்பான உணவை அதிகம் சாப்பிட்டால், செரிமான இறுதியிலும் மாற்றம் அடையாமல் இனிப்பாகவே இருக்கும்.

செரிமான சக்தி மந்தமாக இருந்தால், இனிப்பு சரிவர சீரணமாகி சேராமல் இனிப்பாகவே நிற்கும். இதை வெளியேற்ற உடல் முயற்சி செய்கிறது. அதற்கு சிறுநீர் பாதையை தேர்ந்தெடுக்கிறது. அதனால், சிறுநீரில் சர்க்கரையின் வரவு தெரிகிறது.

எப்படி உணர்வது?

சிறுநீர் அதிக அளவில் அடிக்கடி போதல், அதிக தண்ணீர் தாகம், கை, கால், பாதங்களில் அதிக தளர்ச்சி, சோர்வு, தோல் வறட்சி, மலச்சிக்கல், நாக்கில் மாவு படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், ரத்தத்தில் இனிப்பு குறைக்கப்பட வேண்டும்; செரிமானம் மேம்பட வேண்டும்.

இதற்கு என்ன வழி?

ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் சாறு, கால் ஸ்பூன் மஞ்சள் துாள், நான்கைந்து சொட்டு தேன் கலந்து குழைத்து, காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, சர்க்கரை உபாதை குறைந்து விடும். தேன் சாப்பிடலாமா என்றால், ஒரு ஆண்டு பழசான தேன் இனிப்பாக இருந்தாலும், செரிமானத்தின் இறுதியில் காரமாக மாறி விடுவதால், சர்க்கரை கோளாறு உள்ளவர்கள் தேனை சிறிய அளவில் சாப்பிடலாம்.

புதிய அரிசி, கோதுமை ரொம்ப கெடுதல். அறுவடையாகி 9 - 10 மாதங்கள் பழசான அரிசி, கோதுமையை முழு உணவாக எடுத்துக் கொள்ளாமல், சிறு தானியங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொண்டைக்கடலை, துவரை, கொள்ளு, பாசிப்பயறு, நிலக்கடலை இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு பருப்பு வகைகளும் மிதமாக சேர்க்கலாம். கறி காய்களில் கசப்பு, துவர்ப்பு சுவை கொண்டவை நல்லது. கசப்பு சுவையுள்ள கீரைகளும் தாராளமாக சேர்க்க வேண்டும். புளிப்பு கூடாது; அளவோடு நெய் சாப்பிடலாம்; கோழி மாமிசம் சாப்பிடலாம்; முட்டை கெடுதல்.

அரிசி விரைவில் செரிக்கும்; கோதுமை மெதுவாக செரிக்கும். நாள் பட்ட சர்க்கரை கோளாறில் தாதுக்களின் அழிவு அதிகமாவதால் மெதுவாக செரிக்கும். நல்ல சத்துக்கள் ரத்தத்தில் சேருவதற்கு, ஆரோக்கியமான உணவு அவசியம். இவை அனைத்தும் பழைய அரிசி, கோதுமையில் கிடைக்கின்றன.

டாக்டர் ரஞ்சனி சாய்ராம்,

ஆயுர்வேத மருத்துவர், சென்னை94444 41771

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us