sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/இதய நோய்க்கு வறுத்த மீன் எதிரி!

இதய நோய்க்கு வறுத்த மீன் எதிரி!

இதய நோய்க்கு வறுத்த மீன் எதிரி!


PUBLISHED ON : செப் 27, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சைவ உணவுகளில் மீன் உணவு, உடல் நலத்துக்கு சிறந்த பலனை தருவதோடு, இதய நோய் பாதிப்பு வராமல் தடுக்கும் என, ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது. பல நோய்களுக்கு முறையற்ற உணவுப்பழக்கமே காரணமாக இருக்கிறது. உடல் பருமன் எற்பட்டு அவஸ்தைப்படும் பலர், உணவு பழக்கத்தை சரியாக பின்பற்றாததே காரணம் என கூறப்படுகிறது.

இன்றைக்கு பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம், இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 முதல் 49 வயதுவரை உடைய, 50 ஆயிரம் பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கு வாரம், 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு, இதயநோய் பாதிப்பு குறைந்து இருப்பது தெரியவந்தது. ஒமேகா கொழுப்பு அமிலம்

மீன்களில் ஒமேகா, 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என, புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே

நல்ல பலனை தருகிறது.

நீரில் வேகவைத்த மீன் வகைகளை சாப்பிட்டால், உடனே பலன் கிடைக்கிறது. சராசரியாக, 63 வயது உள்ள பெண்கள், 85 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு, 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது.

பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு, சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடலாம். கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் தரும். மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன், அத்தகைய உணவு தயாரிப்பு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு, 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us