sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ரத்த அழுத்தம் குறைக்கும் வௌ்ளரிக்காய்!

/

ரத்த அழுத்தம் குறைக்கும் வௌ்ளரிக்காய்!

ரத்த அழுத்தம் குறைக்கும் வௌ்ளரிக்காய்!

ரத்த அழுத்தம் குறைக்கும் வௌ்ளரிக்காய்!


PUBLISHED ON : ஜூன் 25, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 25, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீர் சத்துள்ள காய்கள் எல்லாமே உடல் நலத்துக்கு நன்மை தரும் காய்களாகும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணம் உள்ளது. இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

காய்களில் குறைவான கலோரி அளவுள்ளது, வெள்ளரிக்காய் மட்டும்தான். 100 கிராம் வெள்ளரியில், 18 கலோரி மட்டுமே உள்ளது. குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

பித்தம், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் குணமாக்குவதில் இக்காய் சிறந்தது. வெள்ளரி கீழ்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாக திகழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவீதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது.

மீதி நான்கு சதவீதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் 'பி' ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் 'சி'யும் சிறிதளவு உண்டு. இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது. வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. வயிற்று புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.

காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும். வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

தினமும் சத்துணவு போல் சாப்பிட தயிரில் வெள்ளரி காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி,முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும் போட்டுவைத்து வெஜிடபிள் சாலட் போல் பரிமாற வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்; ஆற்றலையும் அதிகரிக்க செய்யும். இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது. மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவர். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக காயை அரைத்து முகத்தில்பூசவேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம். நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும்.






      Dinamalar
      Follow us