sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சளி, இருமல் போக்கும் அகத்திக்கீரை சாறு

சளி, இருமல் போக்கும் அகத்திக்கீரை சாறு

சளி, இருமல் போக்கும் அகத்திக்கீரை சாறு


PUBLISHED ON : பிப் 24, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சளி, இருமல் தொல்லைகள் எல்லோருக்கும் சர்வ சாதாரணமாக வரக்கூடிய பிரச்னையாகும். இதை குணமாக்க ஆங்கில மருந்துகளை விட இயற்கை மருத்துவம் சிறந்ததாகும். இருமல், இளைப்பு, ஆஸ்துமா ஆகியவை குணமாக, தொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, தலைவலி ஆகிய நோய்கள் குணமாகும்.

ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி ஆகிய மூன்றையும் ஒன்றாக பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை தீரும். அவரை இலைச்சாற்றை துணியில் நனைத்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி, தலைபாரம், சைனஸ் பிரச்னைகள் தீரும். ஒரு பிடி அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் குடித்தால் சளி, சைனஸ் ஆகியவை சரியாகும்.

அதி மதுரம், ஆடாதொடை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும். திப்பிலி, சுக்கு, சித்தரத்தை அனைத்தையும் சம அளவில் எடுத்து, கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் நோய்கள் குணமாகும்.

அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப் பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us