sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நோய் எதிர்க்கும் கொய்யா

நோய் எதிர்க்கும் கொய்யா

நோய் எதிர்க்கும் கொய்யா


PUBLISHED ON : மார் 01, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது, ஒரே ஒரு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் என்பது தெரியுமா?

தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இதில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும்

அடங்கியுள்ளன. மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள், கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப்பிரச்னையில் இருந்து மீளலாம். கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.

இந்த பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும்.

இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். கொய்யா பழத்தில் உள்ள லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.

இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். கொய்யா பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை விட, தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும், இது முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும்.

இப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது, அதேபோன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us