sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/உடல் ஆரோக்கியத்துக்கு குடல் ஆரோக்கியம் முக்கியம்!

உடல் ஆரோக்கியத்துக்கு குடல் ஆரோக்கியம் முக்கியம்!

உடல் ஆரோக்கியத்துக்கு குடல் ஆரோக்கியம் முக்கியம்!


PUBLISHED ON : மார் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதிக பதப்படுத்தப்பட்ட உணவு தொடர்ந்து சாப்பிடுவது, குடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, அதனுடன் தொடர்புடைய பிற உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் டாக்டர் மோகன் பிரசாத்.

வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம் என்ன?

வயிறு மற்றும் குடல் தொடர்பான பல பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கங்களே. அதிக பதப்படுத்தப்பட்ட, கொழுப்பு நிறைந்த உணவுகளை, எந்த நேரத்திலும் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது.

இவை சரியாக செரிமானம் ஆகாமல், குடலில் நீண்ட நேரம் தங்குவதால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகின்றன. இதனால், குடலில் நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து, குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

தற்போது பல துரித உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகளுடன், 'மயோனெய்ஸ்', சாஸ் தொட்டு சாப்பிட பலரும் விரும்புகின்றனர். சில சாஸ்களில் பயன்படுத்தப்படும் 'பாலிசோர்பேட்-80' (Polysorbate-80) என்ற கெமிக்கல், சிறுகுடலின் உள்ளமைப்பை பாதுகாக்கும் மெல்லிய படலத்தை பாதிக்கக்கூடும். இதனால் குடலில் அழற்சி, செரிமானக்கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

எந்தெந்த உணவு குடலுக்கு கேடு?

அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவு, செயற்கை நிறமிகள் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்படும் உணவு, குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

சிப்ஸ் வகைகள், நுாடுல்ஸ், பாக்கெட், பாட்டில்களில் விற்கப்படும் குளிர்பானங்கள், சிக்கன் நகெட்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள், சில பிஸ்கெட்ஸ், பேக்கரி உணவு அடிக்கடி சாப்பிடுவது குடலுக்கு நல்லதல்ல.

வயிறு சார்ந்த பிரச்னைகளின் அறிகுறி என்னென்ன?

நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிறு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிகமாக சாப்பிட்டும் உடல் எடை குறைதல், செரிமான கோளாறு, மலச்சிக்கல், அதிக சோர்வு, தொப்புள் சுற்றி வலி ஏற்படுதல், இரவில் எழுந்து மலம் கழிப்பது, மலத்துடன் ரத்தம் கலந்து வெளியேறுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அலட்சியமாக இருக்கக் கூடாது.

இதனால் என்னென்ன நோய்கள் வர வாய்ப்பு?

குடலின் செரிமான இயக்கம், நீண்டகாலம் பாதிக்கப்பட்டால், பெருங்குடல், கல்லீரல் மற்றும் சிறுநீரக புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு, உயர் ரத்தம் அழுத்தம் போன்ற பிற பிரச்னைகளும் உருவாகும் அபாயம் உள்ளது.

சிலவகை புற்றுநோய்கள், ஆரம்பகால அறிகுறிகள் இல்லாமல் வளரக்கூடும். இதனால், 45 வயதுக்கு மேல், ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

என்னென்ன உணவு சாப்பிடலாம்?

பசிக்கு எளிய, சத்தான உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது அவசியம். குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தி செய்ய, இட்லி போன்ற புளிப்பூட்டப்பட்ட உணவு, பழைய சோறு தண்ணீர், மோர் மற்றும் சிறிது வெந்தயம் கலந்து சாப்பிடலாம். கீரைகள், காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாக்கை கட்டுப்படுத்தினாலே, குடல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us