தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/துளசி இலையில் உடல் ஆரோக்கியம்

துளசி இலையில் உடல் ஆரோக்கியம்

துளசி இலையில் உடல் ஆரோக்கியம்


PUBLISHED ON : மே 17, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

காய்ச்சல்: உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் காய்ச்சல் குறைந்துவிடும்.

தொண்டைப்புண்: துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

வாய் பிரச்னைகள்: ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி, தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்னைகள் அகலும்.

இதய நோய்: தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சளி, இருமல்: கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று, அதன் சாற்றை விழுங்க வேண்டும். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்து விடும்.

நீரிழிவு: நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். இன்சுலின் சீராக சுரந்து, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைக்கும்.

சிறுநீரக கற்கள்: துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us