PUBLISHED ON : ஜூன் 29, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை, தவறாமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள், குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள் அடுத்த சீசன் வரை, உடலுக்கு பலன் தரும். இப்போது நாவல் (நாகப்) பழ சீசன். எளிதாகக் கிடைக்கக் கூடிய, விலை குறைந்த பழங்கள் இவை. எனவே தாராளமாக அனைவரும் சாப்பிடலாம்.
நாவல் பழத்தின் நன்மைகள்:
= இரும்புச் சத்து நிறைந்தது. ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் தன்மையும் இதற்கு உண்டு
= உடலை குளிர்ச்சியாக வைப்பதோடு, ஜீரணத்திற்கும் உதவும்
= இதில் உள்ள துவர்ப்பு சுவை, தோலில் ஏற்படும் கொப்புளங்களை தடுப்பதோடு, தோலை பளபளப்பாக வைக்க உதவுகிறது
= வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாதுக்கள் நிறைந்தது
= ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்புத் தருகிறது.

