தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கர்ப்பக்கால நீரிழிவு: அச்சம் வேண்டாம்!

கர்ப்பக்கால நீரிழிவு: அச்சம் வேண்டாம்!

கர்ப்பக்கால நீரிழிவு: அச்சம் வேண்டாம்!


PUBLISHED ON : நவ 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2026


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்கள் கர்ப்பக் காலத்தில் வயிற்றில் வளரும் பிள்ளைக்கும் சேர்த்து உணவை உண்பர். 'மசக்கை'யில் பிடித்ததை உண்ணலாம் என்றாலும், முறையற்ற உணவால் ரத்த சர்க்கரை அளவு கூடி, ‘கர்ப்பக் கால நீரிழிவு’ (Gestational Diabetes) ஏற்படலாம். எனவே, சமச்சீரான ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் மட்டும் தோன்றும், 'தற்காலிக சர்க்கரை' நோயால் பல சிக்கல்கள் ஏற்படலாம். இதை முறைப்படுத்தாமலோ, குணப்படுத்தாமலோ விட்டால், தாய்க்கும் சேய்க்கும்கூட பாதிப்புகள் உண்டாகலாம்.

பெரும்பாலும் கர்ப்பக்கால நீரிழிவு, மகப்பேற்றுக்குப் பின் சரியாகி விடும். சமயங்களில் சில தாய்மார்களுக்கு பிற்காலத்தில் நீரிழிவு ஏற்படுவதோடு, அதனால் குழந்தையும் பாதிக்கப்படலாம். எனவே, கர்ப்பம் அடைந்த முதல் சில மாதங்களிலேயே ‘கர்ப்பக்கால நீரிழிவு சோதனை’ செய்ய வேண்டும்.

உலக சுகாதார மைய (WHO) அறிவுறுத்தலின்படி, கருவுற்ற 24 முதல் 26 வாரங்களுக்குள் 'குளுகோஸ் பொறைச் சோதனை' (Glucose Tolerance Test - GTT) எடுக்க வேண்டும். கருவுற்ற பெண்ணுக்கு கூடுதல் நீரிழிவு அபாயமோ, அவரது குடும்பத்தினருக்கு நீரிழிவு இருந்தாலோ மரபணு ரீதியில் அவருக்கு அபாயம் அதிகம்.

பி.சி.ஓ.எஸ்., இருந்திருந்தாலோ அல்லது அவரது 'உடல் நிறைக் குறியீடு' (BMI) இயல்பை விட அதிகம் இருந்தாலோ, கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் குளுகோஸ் பொறைச் சோதனை எடுக்க வேண்டியது அவசியம். சோதனையில் நீரிழிவு கண்டறியப்பட்டால், அதன் தீவிரத் தன்மையைப் பொறுத்து சிகிச்சை எடுக்க வேண்டும்.

சர்க்கரை அளவு நடுத்தரமாகக் கூடியிருந்தால், மாத்திரை, மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதன் அளவு அதிகம் கூடியிருந்தால் ஆபத்தானது. இன்சுலின் மருந்து, சீரான கால அளவுகளில் எடுக்க வேண்டும். அந்தச் சமயத்தில் தாய்க்கு, மன அழுத்தம் உண்டாகாமல் தடுக்க குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முக்கியம்.

கர்ப்பக்கால நீரிழிவை விரைவில் கண்டறிந்து, சரியான சிகிச்சை அளித்தால் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு நேராமல் காக்கலாம். எனவே, கர்ப்பக் கால நீரிழிவு குறித்து எந்த அச்சமும் வேண்டாம்!

கே.எஸ். கவிதா கவுதம்

மூத்த கருத்தரிப்பு நிபுணர்

ப்ளூம் லைப் மருத்துவமனை, வேளச்சேரி, சென்னை.

72999 11107

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us