sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

நலம் நம் பலம்

/

நலம் நம் பலம்

நலம் நம் பலம்

நலம் நம் பலம்


PUBLISHED ON : ஜூலை 20, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புற்றுநோயை குணப்படுத்த முடியும்

ஆண்களுக்கு வாய், உதடு, நுரையீரல், இரைப்பை ஆகியவையும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் ஆகியவை நோய் தாக்கும் இடங்கள்.

சுகாதாரம் இல்லாததே, பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட காரணம். புகையிலை, சிகரெட், குடிப்பழக்கம் ஆண்களுக்கு காரணமாக உள்ளது. ஆனால், இவையெல்லாம் 20 சதவீதம் மட்டுமே, 80 சதவீத புற்றுநோய் உணவு முறைகளால்தான் ஏற்படுகிறது. நாம் தினசரி சாப்பிடும் உணவு, உடல் பருமன், நமது வாழ்வியல் முறை, மொபைல், லேப்டாப் உள்ளிட்டவற்றை அதிக நேரம் பார்ப்பது, மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் துாக்கமின்மையும், புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. புற்றுநோய் வராமல் இருக்க, நமது உணவு முறை, வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

புற்றுநோய் ஒரு உயிர் கொல்லி நோயாக இருந்தாலும், குணப்படுத்த முடியும், உயிரை பாதுகாக்க முடியும். பெண்கள் மாதம் ஒரு முறை, மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வலி, கட்டி போன்று ஏதாவது இருந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டும். பலர் நோய் முற்றிய பிறகே, மருத்துவமனைக்கு செல்கின்றனர். புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து, விரைவில் கண்டுபிடிக்கப்படலாம். பல சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் புற்றுநோயை வென்று, இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

மாதவிடாய் சொல்லும் சேதி

பெண்களுக்கு மாதவிடாய், மாதம் ஒருமுறை வரும். சிலருக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை வரும். இதில் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் தள்ளி போனால், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். உடல் ஆரோக்கியம் என்பது மனதையும், எண்ணங்களையும் சார்ந்தது. பெண்கள் கவலைப்படுவதை விட்டு, விட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தாய் நலமாக இருந்தால்தான், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும்.

டாக்டர் பாலமுருகன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்

நோயை நாம்தான் அழைக்கிறோம்!

மாரடைப்பு ஏற்பட்டால், முதல் ஒரு மணிநேரம் 'கோல்டு' ஆக பார்க்க வேண்டும். எப்போது, சிறு சந்தேகம் இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.நமது சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை, பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது உள்ள சூழலில் நோய் நமக்கு வருவதில்லை; நாம் தான் நோயை அழைக்கிறோம். உணவு முறை மாற்றம், தினசரி நடைபயிற்சி போன்றவை மேற்கொள்ள வேண்டும். நெஞ்சு பகுதியில் வலி, முதுகு வலி, பல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டும். பல மாரடைப்பு அறிகுறிகள் இல்லாமல் வருகின்றன. இதனால், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

முரளீதரன், இருதய மருத்துவர்

சர்க்கரை மாத்திரைகளால் கிட்னிக்கு பாதிப்பில்லை

* சர்க்கரை நோய் என்பது நோயல்ல. நம் உடலில் இன்சுலின் சுரக்காததால் ஏற்படும் ஒரு குறைபாடு. இது குழந்தைகளுக்கு கூட வரும்.

* மரபு அணுக்கள், வேலைப்பளு, மன அழுத்தம், உடல் பருமன், சரியான துாக்கம் இன்மை, நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது ஆகிய காரணங்களால் டைப் 2 சர்க்கரை குறைபாடு ஏற்படுகிறது.

* சர்க்கரை பிரச்னை இருப்பவர்கள் உணவு, உறக்கும், உடற்பயிற்சியை முறைப்படுத்திக் கொண்டால், சர்க்கரை குறைபாட்டில் இருந்து நிச்சயம் விடுபடலாம்.

* சர்க்கரை அளவு தொடர்ச்சியாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டால், மாத்திரையை நிறுத்திக்கொள்ளலாம். மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு எல்லாம் சாப்பிடலாமா? என்றால் அது சாத்தியமில்லை. அதன் விளைவு எதிர் மறையாக இருக்கும்.

* சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருக்கும் போதுதான், இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். குறைந்து, நார்மலாகி விட்டால் ஊசி தேவையில்லை. இன்சுலின் ஊசியால் எந்த பின் விளைவும் ஏற்பட்டதில்லை.

* வெள்ளை சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை எல்லாம் ஒன்றுதான்; சாப்பிடக்கூடாது.

* பழங்களில் மா, பலா, வாழை, அன்னாசி, திராட்சை, சப்போட்டா இந்த ஆறு பழங்களும் சர்க்கரையை கூட்டும். அதனால் கூடாது. மற்ற பழங்களை, சர்க்கரை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பவர்கள் அளவாக சாப்பிடலாம்.

* அரிசி சாதம், சப்பாத்தி இரண்டிலும் ஒரே அளவுதான் சர்க்கரை உள்ளது. அளவாக, சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். கஞ்சி, கூழ் கூடாது. நார்சத்துள்ள சிறுதானியங்கள் சாப்பிடலாம். அரைத்து மாவாக்கி சாப்பிடக்கூடாது.

* சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம். மாத்திரை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறைத்து அளவாக வைத்துக்கொண்டால், மாத்திரை நிறுத்தி விட்டு, அதே நிலையை தொடரலாம். இந்த நடைமுறையில் மாற்றம் இருந்தால் மாத்திரையை நிறுத்த முடியாது.

* தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டால், கிட்னி பாதிக்காது. ஒரு மாத்திரையால் பக்க விளைவு வருகிறது என்றால், மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதிக்காது. பாதிப்பை ஏற்படுத்தும் மாத்திரையை, தடை செய்து விடுவார்கள்.

டாக்டர் சண்முகம். சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்

'கூகுள் டாக்டரை' நம்பாதீங்க!

சமூக வலை தளங்களில் ஏராளமான மருத்துவ தகவல்கள் பகிரப்படுகின்றன. அதில் பெரும்பாலும் தவறானவை. சமீபத்தில், திருமணம் ஆகாத பெண் ஒருவர், என்னிடம் மருத்துவ ஆலோசனை பெற வந்திருந்தார். அவருக்கு 'அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட்' எடுக்க எழுதி கொடுத்தேன்.

டெஸ்ட் எடுத்த அவர் அழுது கொண்டே வந்தார். டெஸ்ட் முடிவு, அவருக்கு பி.சி.ஓ.டி., பிரச்னை இருப்பதாக சொன்னது. அது ஒன்றும் பிரச்னை இல்லை; சரி செய்து விடலாம் என்று சொன்னேன்.

ஆனால் அவர் நம்ப மறுத்தார். அவர் கூகுளில் தேடி பார்த்த போது, 'இதை சரி செய்ய முடியாது; குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கும்' என்று, பதில் வந்ததாக சொன்னார்.குழந்தை பேறு மருத்துவர் சொல்வதை விட, கூகுள் சொல்வதைதான் உண்மை என்று நம்புகின்றனர். இவர் மட்டுமல்ல பலர், சோசியல் மீடியாக்களில் வருவதை உண்மை என்று நம்புகின்றனர். இது தவறான நம்பிக்கையாகும்.

தன் மீது அக்கறை வேண்டும்

பெண்களுக்கு கருத்தடை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை, சிசேரியன் ஆகி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான், அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த இடைவெளியில், காப்பர் டி போட்டுக் கொள்ள சொன்னால், வேண்டாம் என்கிறார். பிறகு எப்படி தடுப்பது என்று கேட்டால், 'நாங்கள் கன்ட்ரோலாக இருந்து கொள்கிறோம்' என்கிறார். அடுத்த ஆறு மாதங்களில் அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக வந்து நின்றார்.

பொதுவாக, பெண்களுக்கு தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையில்லை. நோய் முற்றிய பிறகுதான் வருகின்றனர். பல பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வலி இருக்கும். வலி லேசாக இருந்தால் பொறுத்துக் கொள்ளலாம். அதிகமாக இருந்தால் மருத்துவரை பார்த்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் எந்த பாதிப்பு இருக்காது. பலர் இதை செய்வதில்லை.

டாக்டர் அமுதா ஹரி, குழந்தை பேறு சிறப்பு மருத்துவர்






      Dinamalar
      Follow us