தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆரோக்கிய சிரிப்பு: எப்படி "பிரஷ்' செய்வது

ஆரோக்கிய சிரிப்பு: எப்படி "பிரஷ்' செய்வது

ஆரோக்கிய சிரிப்பு: எப்படி "பிரஷ்' செய்வது


PUBLISHED ON : அக் 23, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 23, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

* ஏழு வயதாகும் என்மகன் அதிகளவு சாக்லெட் சாப்பிடுகிறான். பற்களில் மஞ்சள் கறையும் உள்ளது. அவன் பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்?



சிறு குழந்தைகளுக்கு முதலில் சரிவர பிஷ் செய்ய கற்றுத் தரவேண்டும். சிறிய பிரஷ்ஷில் ஒரு பட்டாணி அளவு டூத்பேஸ்ட் வைத்து, மேலும் கீழுமாக பிரஷ் செய்ய வேண்டும். இடவலமாக பிரஷ் செய்யக் கூடாது. பற்களின் மேற்பரப்பில் வட்டமாக தேய்க்கலாம். இதனால் பற்களின் மேல் உள்ள அழுக்குகளை அகற்றலாம்.

சாக்லெட், கேக் போன்றவற்றை குறைவாக சாப்பிட வேண்டும். பெரிய பார் சாக்லெட்டை சிறிது சிறிதாக அல்லது 3, 4 தடவையாக கொடுப்பதை தவிர்க்கவும். இதனால் பற்களில் மேல் சாக்லெட் தங்கும் நேரம் அதிகரிக்கிறது. ஒரு தடவை சாக்லெட் சாப்பிட்டுவிட்டு, வாயை நன்கு கொப்பளித்தால், பற்களின்மேல் சாக்லெட் ஒட்டி, பற்சொத்தை ஏற்படுவதை தவிர்க்கலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள ஆப்பிள், சோளம், காய்கறிகள் அதிகம் உண்ண வேண்டும். இப்பொருட்களை மெல்லும்போது அதிகளவு உமிழ்நீர் சுரந்து பற்களை இயற்கையாகவே சுத்தம் செய்யும்.



டாக்டர் எஸ்.முத்துராமன், மதுரை, 94430 - 61160.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us