தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/ஆரோக்கியமான பழக்கம் இருதய நலனுக்கு முக்கியம்!

ஆரோக்கியமான பழக்கம் இருதய நலனுக்கு முக்கியம்!

ஆரோக்கியமான பழக்கம் இருதய நலனுக்கு முக்கியம்!


PUBLISHED ON : மார் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உடற் பயிற்சிகள், இருதய நலனுக்கு மிக அவசியம்,'' என்கிறார், ராயல் கேர் மருத்துவமனையின் டாக்டர் கார்த்திக் குமரன். இவர் கூறியதாவது:

கைப்பிடி அளவுள்ள இருதயம், உடல் முழுவதும் ரத்தத்தை செலுத்தும் பணியில் நிற்காமல் செயல் படுகிறது, அது ரொம்ப சென்ஸிட்டிவ்.

கொஞ்சம் தொட்டாலே உடலில் ரத்த அழுத்தத்தை மாற்றும். வெளிநாடுகளில் இருதயத்துக்கு மாற்றாக இயந்திரம் பொருத்தி சிகிச்சை அளிக்கின்றனர்.

இந்தியாவில், இருதயம் துடித்துக் கொண்டிருக்கும் போதே அதில் உள்ள மில்லி மீட்டர் அளவுகளில் உள்ள ரத்த நாளங்களையும் அறுவை சிகிச்சை செய்து மாற்றுகிறோம் என்பது தான் நமது திறமை.

ரத்த குழாய்களில் கொழுப்பு படிவது என்பது, 10 வயது முதலே துவங்குகிறது. குழந்தை நன்றாக வளர பல அம்மாக்கள், சாப்பிடு, சாப்பிடு என சொல்லி, அளவை மிஞ்சுகின்றனர். இதனால் உடல் பருமனாகி, இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

சமச்சீர் உணவை குழந்தை பருவம் முதல் பழக்குவதால், வளர்ந்த பின்னரும், உணவில் கவனம் இருக்கும்.

ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், சுய கட்டுப்பாடுகள், பொழுது போக்குகள், விளையாட்டு போட்டிகள், உடற் பயிற்சிகள், இருதய நலனுக்கு மிக அவசியம். 70 சதவீதம் உணவு கட்டுப்பாடு, 30 சதவீதம் உடற்பயிற்சி ஆரோக் கியமானது.

சிக்கன், மட்டன் இறைச்சி அளவோடு சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், உடற்பயிற்சி செய்து அந்த கலோரியை குறைத்து விட வேண்டும். அரிசி போன்ற கார்போஹைட்ரேட் உணவை குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்த்து சமச்சீரான உணவு முறையை வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவது, மாரடைப்பை தடுக்கும்.

ராயல் கேர் மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை, குறைந்தபட்ச இருதய நுண்துளை அறுவை சிகிச்சைக்கான நவீன கருவிகள், புதிய கருவிகள், தொழில்நுட்ப முறைகள் உள்ளன. நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குழு சிகிச்சை அளிக்கிறது. விபரங் களுக்கு 90878 77977.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us