sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சூடு தணிக்கும் கோவைக்காய்!

சூடு தணிக்கும் கோவைக்காய்!

சூடு தணிக்கும் கோவைக்காய்!


PUBLISHED ON : ஏப் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவைக்காய், முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. இன்றைக்கு, இதன் மருத்துவ குணத்தை அறிந்து, மக்கள் பலர், விரும்பி சாப்பிட துவங்கியுள்ளனர். கோவைக்காய், உடல் சூட்டை தணிக்கும்.

உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது;அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. தவறான உணவுப் பழக்கங்களால், வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது; ரத்தத்தை சுத்திகரிக்கும்.

பித்தம், வாயு ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்து. கோவை இலைச் சாறு, பித்தம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என, ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள், கோவைக்காயை, தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.

உடலுக்கு பலம்: சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன், மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சேர்த்து, தேவையான அளவு உப்பு கலந்து பச்சடியாக சாப்பிடுவது, உடல் பலத்துக்கு சிறந்தது. வாரம் 2 நாட்கள், பகல் உணவில் சேர்த்தால், வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே, வாய்ப்புண் ஆறும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள், வாரம் இரண்டு நாட்கள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும், மேற்கண்ட பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு, கபத்தை வெளியேற்றும். வலியை குறைக்கும்.

இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றுக்கு நல்ல மருந்து. இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல் நோய்களை குணப்படுத்த உதவும். மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்தசோகை, பித்தம், காமாலை முதலான பிரச்னைகளை குணப்படுத்தும்.கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும். பழமையான ஆயுர்வேத மருத்துவ நூல்களில், கோவைக்காயில் உள்ள சிறப்பு அம்சங்கள், நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயிற்று பிரச்னை போக்கும்: மெட்டபாலிக் தன்மைகள், இருதயத்துக்கு மிகவும் நல்லது; கல்லீரலுக்கும் நன்மை பயக்கக் கூடியது. மஞ்சள் காமாலை, ஆஸ்துமா நோயாளிகள், இதை சாப்பிட்டால் விரைவில் குணம் ஏற்படும். கோவைக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக, கோவைக்காய் மற்றும் செடியிலிருந்து ஆயுர்வேத மருந்துப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் அதிகபட்ச வெள்ளைப்படுதலைக் குணப்படுத்தவும், சிறுநீர் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தவும், வயிறு சார்ந்த செரிமான பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்துகளுக்கும் பயன்படுத்தப் படுகிறது.

பல ஆயுர்வேத மருந்துகள், கோவைக்காய் செடியிலிருந்து பெறப்படும் சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் கஷாயம், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வு தன்மையை நீக்க அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சோர்வை போக்கவும் தரப்படுகிறது.

எடையிழப்பு போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வாகவும் அளிக்கப்படுகிறது. நாக்கில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த இது உதவுகிறது. வாரத்தில் ஒருமுறை சாப்பிட்டு வந்தால், பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us