sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

/

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?


PUBLISHED ON : ஏப் 29, 2012

Google News

PUBLISHED ON : ஏப் 29, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எஸ்.பிரபாகரன், மதுரை: எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது?

உடல் நலத்திற்கு உடற்பயிற்சி உதவுவது போல, உதவக் கூடியது வேறு எதுவும் இல்லை. அது உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் நல்லது. தினமும் குறைந்தபட்சம், 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். வாரத்திற்கு, 150 நிமிடங்களாவது, அதாவது வாரத்தில், 5 நாட்கள் உடற்பயிற்சியை செய்வது அவசியம். இதனால் ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை நன்கு குறைவதுடன், உடலுக்கும், இதயத்திற்கும் பல வழிகளிலும் பயனளிக்கிறது. எனவே, உங்கள் உடல் நலத்திற்கு நீங்கள் செய்யும் சிறந்த முதலீடு உடற்பயிற்சியே.

* ஆர்.முத்துச்சாமி, திருவாடானை: என் தாயாருக்கு, 'பேஸ் மேக்கர்' பொருத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. கடந்த மாதம் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இது எப்படி சாத்தியம்?

பேஸ் மேக்கர் என்பது, இதய மின்னோட்டத்தில் ஏற்படும், தடையைச் சரி செய்ய பொருத்தப்படும் ஒரு கருவி. இது பொதுவாக ஒருமுறை பொருத்தப்பட்டால், 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு, இதன் பாட்டரி செயல்படும். மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும், அடைப்பில் உருவாகும் ஒரு நோய். எனவே, பேஸ் மேக்கர் பொருத்துவதற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

மாரடைப்பை தடுக்க வாழ்க்கை முறை மாற்றம், சரியான உணவுப் பழக்கம், ரத்த சர்க்கரை அளவு, ரத்தஅழுத்தம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது, தினசரி உடற்பயிற்சி போன்றவை சிறந்தவை. எனவே, உங்கள் தாயாருக்கு ஆஞ்சியோகிராம் செய்து, ரத்தநாளத்தின் எந்த இடத்தில் அடைப்பு உள்ளது என கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.

* வி.மாதவராஜன், தேனி: என், 7 வயது மகளுக்கு எக்கோ பரிசோதனை செய்ததில், 'TOF' என்ற வியாதி உள்ளதாக வந்துள்ளது. இது என்ன வியாதி?

'Tetralogy of Fallot' என்பதன் சுருக்கமாகும். இது பிறவியில் இருந்தே ஏற்படுகிறது. இதன் அறிகுறி, உடல் நீலநிறமாக தென்படலாம். படபடப்பு, இளைப்பு போன்றவை ஏற்படலாம். இது இதயத்தில் நான்கு வித கோளாறுகள் உள்ளன என்பதை குறிக்கிறது.

இதயத்தின் கீழே உள்ள இருபாகங்களுக்கும் இடையில் ஒரு ஓட்டை, வலதுபுறம் ஒரு அடைப்பு, இதய சுவரில் வீக்கம் மற்றும் ஒரு ரத்தக்குழாயில் பிரச்னை உள்ளது என்று பொருள்.

இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். எனவே, நீங்கள் நாட்களை தள்ளிப் போடாமல், உடனடியாக இதய நிபுணரை சந்தித்து, ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது முக்கியம்.

டாக்டர் விவேக்போஸ், மதுரை.






      Dinamalar
      Follow us