தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/எவ்வளவு @நரம் நடைபயிற்சி?

எவ்வளவு @நரம் நடைபயிற்சி?

எவ்வளவு @நரம் நடைபயிற்சி?


PUBLISHED ON : ஆக 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

Prasugrel என்ற மருந்து Clopidogrel என்ற மருந்தைவிட சிறந்த மருந்தா?

எஸ்.சீத்தாராமன், திண்டுக்கல்:



'பிராசுக்ரல்' என்று தற்போது புதிதாக வந்துள்ள மருந்து 'ஆன்டி பிளேட்லெட்' வகையை சேர்ந்தது. இது ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்ளும் நவீன மருந்து. தற்போது ஸ்டென்ட் பொருத்தியவர்களுக்கு மட்டுமே தரும் மருந்து வகை. இதுவும், குளோபிடோகிரல் வகையை சார்ந்ததுதான். ஆனால் அதைவிட சக்தி வாய்ந்தது. இதன் அளவு தினமும் 10 மி.கி., இது அதிக சக்திவாய்ந்தது என்பதால் ரத்தக்கசிவுக்கான தன்மை குளோபிடோகிரல் மருந்தைவிட சற்று அதிகமாக உள்ளது.



தினமும் நாம் எவ்வவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

என். ரேவதி, மதுரை:



தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந்தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப்படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், 'சம்திங் இஸ் பெட்டர் தேன் நத்திங்' என்பதைப் போல, 'சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந்தால் கூட நம் உடலுக்கு பல வகைகளில் பயன் உள்ளது என தெரியவந்துள்ளது.



ஒரு மனிதருக்கு சரியான எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

பி. முத்துராஜன், விருதுநகர்



சரியான எடை ஒருவரது உயரத்தை, 'எடை (கிலோவில்) = உயரம் (செ.மீ.,யில்) - 100'' என்று கணக்கிட வேண்டும். அதாவது ஒருவரது உயரம் 170 செ.மீ., என்றால், அவரது சரியான எடை 100கழித்து 70 கிலோ இருந்தாக வேண்டும். எடை கூடக் கூட, பல வழிகளில் நம் உடல் பாதிக்கும் தன்மை உள்ளது.



நம் இருதயத்திற்கு எந்த வகை உணவு சிறந்தது?

* எம். ராஜராஜன், தேவகோட்டை



நமது இந்திய உணவு வகையில், காலையில் 3 இட்லிகள் அல்லது 3 தோசைகள் எடுத்துக் கொள்ளலாம். மதியம் காய்கறிகள் நிறையவும், சாதம் குறைவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இரவில் 3 சப்பாத்திகள் அல்லது கோதுமை தோசை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக எண்ணெய் வகைப் பண்டங்களை தவிர்க்க வேண்டும். அதாவது வடை, பஜ்ஜி, அப்பளம், முறுக்கு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தோசை, சப்பாத்திக்குக் கூட எண்ணெய் இன்றி தயாரிப்பது முக்கியம். உப்பின் அளவை நன்கு குறைக்கவும். எதிலும் சர்க்கரையை சேர்கக்கூடாது. குறிப்பாக காபி, டீயில் சேர்க்காததுடன், இனிப்பு பண்டங்களையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. காலை, மாலையில் ஒரு கப் காபியோ, டீயோ சர்க்கரை இன்றி சாப்பிட வேண்டும். பழவகைகள் எடுத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவைப் பொறுத்தவரை முட்டை வெள்ளைக்கரு, மீன் எடுத்துக் கொள்ளலாம். மட்டன், மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. கொறிக்கும் உணவையும் (ஸ்நாக்ஸ்) அறவே தவிர்த்தாக வேண்டும்.



- டாக்டர் சி.விவேக்போஸ்

மதுரை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us