தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/"உணவில் எந்தளவு உப்பை குறைப்பது?'

"உணவில் எந்தளவு உப்பை குறைப்பது?'

"உணவில் எந்தளவு உப்பை குறைப்பது?'


PUBLISHED ON : பிப் 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனக்கு ஒரு ஆண்டாக ரத்தக்கொதிப்பு உள்ளது. உணவில் உப்பை குறைக்கும்படி டாக்டர் கூறியுள்ளார். அதை எந்தளவு குறைக்க வேண்டும்? ஆர்.பாரதி, மதுரை

ரத்தக்கொதிப்பு என்பது ரத்தநாளத்தில் உள்ள ரத்தஅழுத்தம் அதிகமாகி, அதனால் பல வழிகளில் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது. குறிப்பாக மூளை, நரம்பு, கண், இதயம், சிறுநீரகம் போன்றவை நேரடியாக பாதிக்கப்படும். உணவுப் பழக்கத்தை பொறுத்தவரை உணவில் எண்ணெய், சர்க்கரை, உப்பை நன்கு குறைக்க வேண்டும். இதனுடன் காய்கறி, பழங்களை அதிகம் உண்பது நல்லது. மேலும், மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வதுடன், தினசரி நடைப் பயிற்சி மேற்கொள்வதும் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும். உப்பின் அளவை பொறுத்தவரை சாதத்தில் உப்பை தவிர்த்தும், காய்கறி, சாம்பார், ரசம் போன்றவற்றில் வழக்கமான அளவில் பாதி அளவு எடுத்துக் கொள்வதும் சரியானது. ஏனெனில் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது.

எனக்கு சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுகிறது. ஆஞ்சியோகிராம், எக்கோ பரிசோதனை செய்ததில், Severe A.S மற்றும் 2 Vessel C A D என்றும் வந்துள்ளது. நான் என்ன செய்வது? கே. சம்பத்குமார், திண்டுக்கல்

உங்களுக்கு இதயத்தில் 2 வியாதிகள் உள்ளன. ஒன்று இதயத்தின் இடதுபுறம் உள்ள அயோட்டிக் வால்வில் அடைப்பு உள்ளது. இதை Aortic Stenosis என்பர். மற்றொன்று இதயத்திற்கு ரத்தம் செல்லும் 3 நாளங்களில் இரண்டில் அடைப்பு உள்ளது. இதற்கு ஆபரேஷன் முறையே சரியான தீர்வாகும். ஒரே ஆபரேஷனில் உங்கள் இயற்கையான அயோட்டிக் வால்வை அகற்றிவிட்டு, செயற்கை வால்வை பொருத்திவிடுவதுடன், அதோடு பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்யப்படும்.

எனக்கு, 45 வயதாகிறது. திடீரென படபடப்பு ஏற்பட்டது. என் டாக்டர் Amiodarone என்ற மருந்தை தந்தார். இதை தொடர்ந்து எடுப்பதால் பாதிப்பு வருமா? எஸ். பாலசங்கர், ராஜபாளையம்

Amiodarone என்பது இதய மின்னோட்டத்தை சரிசெய்யும் ஒரு மருந்து. இதில் பல்வேறு வழிகளில் மின்னோட்டம் சரிசெய்யப்படுகிறது. ஆனால், இதற்கு பக்கவிளைவுகளும் அதிகம் உள்ளன. கண், கல்லீரல், நுரையீரல், வயிறு மற்றும் தைராய்டு போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்கென சில பரிசோதனைகளை அவ்வப்போது செய்து கொண்டு, இம்மருந்தின் அளவை சரியாக எடுத்துக் கொண்டால், நாளடைவில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம்.

டாக்டர் விவேக்போஸ்,
மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us