PUBLISHED ON : ஜூலை 27, 2025

குடும்ப டும்ப டாக்டர் என்ற ஒரு விஷ யத்தை இந்த தலை முறையினர் கேள்விப் பட்டிருப்பரா என்று தெரியவில்லை. அதனால், இதை பற்றிய முக்கியத்துவமும் தெரிந் திருக்க நியாயமில்லை. சாதாரண ஒரு தலைவ லிக்கு ஆயிரம் காரணங் கள் இருக்கும். அதே மாதிரி, பெரிய வியா திக்கு மிதமான அறிகுறி களும் சில சமயங்களில் இருக்கலாம்.
குடும்ப டாக்டர் என் பவர், தன்னிடம் வரும் நோயாளியின் குடும்பம், அவர்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் என்று அன்றாட நடவ டிக்கைகள் அனைத்தும் அவருக்கு தெரியும். நான்கைந்து முறை குடும்ப டாக்டரை சந் தித்தால் போதும். என்ன வேலை செய்கிறீர்கள், எத்தனை மணிக்கு காலையில் எழுந்திருப்பீர் கள், தினசரி நடவடிக்கை என்ன, உங்கள் உடலுக்கு என்னென்ன மருந்துகள் ஒத்துக்கொள்ளும், எது அலர்ஜியை ஏற்படுத்தும். பொதுவாக உங்களுக்கு வரும் உடல் பிரச்னைகள் என்ன என்பதெல்லாம் தெரியும். நம்மை பற்றி தெரியும் விபரங்களை வைத்தே சிகிச்சை செய்து விடுவார்; தேவையில் லாமல் பரிசோதனை கள் செய்ய வேண்டியிருக்காது.
நம்மை பார்த்ததும், உடல் எடை அதிகரித்துள் ளது, குறைந்திருக்கிறது என்பதைக்கூட பார்த்தவுடன் சொல்லி விடுவார். புதிதாக ஒரு டாக்ட ரிடம் சென்றால், இது போன்ற விபரங்கள் தெரியாது. தலைவலி என்றதும் அதற்குண் டான பரிசோதனைகளை செய்வார். குடும்ப டாக்டர் என்றால் ஒருங் கிணைந்த அணுகுமுறை இருக்குமே தவிர, நோய் சார்ந்து பார்க்க மாட்டார்.
குடும்ப டாக்டரை நேரில் பார்க்க முடியா விட்டாலும், எந்த ஊரில் இருந்தாலும், அலைபே சியில் அழைத்து, பிரச் னையை சொல்லலாம். ஏற்கனவே நம் உடல் நலம் பற்றி தெரிந்து இருப்பதால், சுலபமாக மருந்துகளை சிபாரிசு செய்ய முடியும். இந்த வசதி வேறு எதிலும் வராது.
இன்றைய சூழலில், எந்த உடல் பிரச்னையாக இருந்தாலும், உடனடி யாக தீர்வு தேவைப்படுகிறது. குடும்ப டாக்டரி டம் சென்றால், முதலில் மருந்து கொடுப்பார். சரியாகாதபட்சத்தில் வேறு மருந்து மாற்றிப் பார்ப்பார். அப்படியும் தீர்வு கிடைக்காவிட்டால் தான், டெஸ்ட் எழுதி தருவார். இதற்கு ஒரு வாரமாகும்.
யாருக்கு இன்று இவ்வளவு பொறுமை இருக்கிறது?
ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்து கார்ப்பரேட் மருத்துவ மனைக்கு சென்றால், எல்லா டெஸ்டையும் முடித்துவிடலாம் என்ற மனநிலை தான் உள்ளது. ஒவ்வொருவரும் குடும்ப டாக்டர் என்ற ஒருவரை அடையா ளம் கண்டுகொள்ள வேண்டும். நாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இருந் தால் நல்லது. அப்படி இல்லாத பட்சத்தில் எங்கு முடியுமோ அங்கு தேர்வு செய்யலாம்.
சிறப்பு மருத்துவர் தேவைப்படும் போது, குடும்ப டாக்டரின் சிபாரிசுடன் செல்வது இன்னும் வசதியாக இருக்கும்; இரண்டாவது அபிப்ராயமும் பெறலாம் -சென்னை போன்ற நகரங்களில் குடும்ப டாக்டராக ஒருவர் செயல்படுவது என்பது இன்றைய நிலையில் சாத் தியமில்லை. 40 ஆண்டு களுக்கு முன்பெல்லாம் வீட்டின் முன் அறையில் அமர்ந்து, வழக்கமாக தங் களிடம் வரும் நோயாளி களை பார்த்து அறிவுரை தருவார். மிகக் குறைந்த கட்டணமே வாங்குவார்.
இன்று பொருளாதார தேவை அதிகம்; சிறிய கிளினிக் நடத்தவும் நிறைய முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. அதனால், ஏதாவது ஒரு தனியார் மருத்துவமனை யில் பல பேர் இணைந் தும், பெரிய மருத்து வமனைகளில் பயிற்சி செய்வதையும் அனைவரும் விரும்புகின்றனர். குடும்ப டாக்டர் என்ற வழக்கம் குறைந்ததற்கு இது தான் பிரதான காரணம்.
டாக்டர் ஆர்.பி.சுதாகர் சிங்,
மருத்துவ இயக்குநர்,
எஸ்.ஆர்.எம்.சி., சென்னை
044-459252/300
singh7071@sriramaramachandra.edu.in

