தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கத்தரி வெயிலின் தாக்கத்தில் தப்பிப்பது எப்படி?

கத்தரி வெயிலின் தாக்கத்தில் தப்பிப்பது எப்படி?

கத்தரி வெயிலின் தாக்கத்தில் தப்பிப்பது எப்படி?


PUBLISHED ON : மே 12, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடை வெயில் உச்சத்தை அடைந்துள்ள தன் எதிரொலியாக, குளிர்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை, அனைத்து வயதினரையும் வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலின் தாக்கம், தற்போது துவங்கி உள்ள, 'கத்தரி' வெயில் காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.

கத்தரி வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது குறித்து ஆலோசனை வழங்குகின்றனர், சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, மருத்துவர்கள், மீனலோசனி மற்றும் சசிரேகா.

கோடை வெப்பத்தின் தாக்கத்தால், நம் உடம்பில் உள்ள நீர்ச் சத்தின் அளவு, அளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வை, ஆவியாதல் ஆகியவற்றால் குறையும். இதனால், உடல் சோர்வு, மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு.

இதனை தடுக்க, ஆறு மாதத்திற்கு உட்பட்ட தங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தரும் இளம் தாய்மார்கள் உள்ளிட்டோர், தினமும், 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது, உணவு மட்டுமின்றி, அவ்வப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும்.

டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா, வாந்தி பேதி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க, கோடை காலம் என்றாலும், தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து பருக வேண்டும். குளிர்பான கடைகளில், பயன்படுத்தப்படும் தண்ணீரின் தூய்மையை பொறுத்தே, வெளியிடங்களில், ஜூஸ், குளிர்பானங்களை குடிக்க வேண்டும். குளிர்பானங்களை முடிந்தவரை, வீட்டிலேயே தயார் செய்ய வேண்டும்.

உடம்பின் நீர்ச் சத்தை பராமரிக்க பயன்படும், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை, கடைகளில் வாங்கும்போது, அவற்றில், ஈ மொய்க்காமல், சுகாதாரமாக விற்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். நீர்சத்து நிறைந்த, இளநீர், நுங்கு ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்வதால், கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற சரும நோய்கள், சின்னம்மை ஆகியவற்றுக்கு இலக்காகாமல் இருக்கலாம். நாகரிகம் என்ற பெயரில், ஜீன்ஸ், 'டீ-ஷர்ட்' போன்ற இறுக்கமான ஆடைகளை அணியாமல், வியர்வை உறிஞ்சும் தன்மைக் கொண்ட, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

டாக்டர் மீனலோசனி, டாக்டர் சசிரேகா,

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us