தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படி கண்டறிவது?

தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படி கண்டறிவது?

தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படி கண்டறிவது?


PUBLISHED ON : பிப் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து தாய்ப்பாலுக்கு இணையான மாற்று உணவுகளை கண்டறிந்தாலும், டாக்டர்கள் சொல்லும் ஒரே வார்த்தை தாய்ப்பாலுக்கு ஈடு இணை கிடையாது என்பதே. கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தை பாலுக்கு அழுகிறதா அல்லது தூக்கத்துக்கு அழுகிறதா என்பது தாய்க்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஒரு சில விஷயங்களை உற்றுநோக்கும் போது குழந்தைக்கு தாய்ப்பால், போதியதா இல்லையா என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது உங்கள் மார்பகத்தில் தொடர்ந்து உறிஞ்சும். அப்படி தொடர்ந்து உறிஞ்சும்போது தான் தாய்ப்பால் சுரப்பும் அதிகரித்து குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கிறது.

அசைவு: தாய்ப்பால் கிடைத்துவிட்டது என்பதை குழந்தையின் தாடை அசைவை வைத்து குழந்தை விழுங்குகிறதா இல்லையா என்பதை பார்த்து கண்டுபிடிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லையெனில் முழுங்கும் தாடை அசைவு இருக்காது. தொடர்ந்து உறிஞ்சி கொண்டேயிருக்கும். அந்த சோர்விலேயே பல நேரங்களில் தூங்கி விடுவதும் உண்டு. இதனால் தாய்ப்பால் குடிக்கும் போது அதன் தாடை அசைவை உன்னிப்பாக கவனியுங்கள்.

ஒரு மணி நேரம்: பொதுவாக தாய்ப்பால் குடித்ததும் குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எப்போதும் சோர்வாக இருந்தால் போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம். தாய்ப்பால் குடித்த ஒரு மணி நேரம் வரை குழந்தை பசிதாங்கும். அதற்குள்ளான நேரத்தில் தொடர்ந்து குழந்தை பசிக்காக அழுதாலும் அதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம்.

உடல் எடை: குழந்தை பிறந்த போது இருந்த எடைக்கும் பின் ஒரு வாரத்திற்கு பிறகு எடை வித்தியாசங்கள் இருக்கும். அதாவது பிறந்திருப்பதை விட 5 முதல் 7 சதவீதம் எடை குறையலாம். ஆனால் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உடல் எடை குறைந்தால் குழந்தைக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

முதல் பத்து நாட்கள் மட்டுமே இந்த எடை குறைவு பிரச்னை இருக்கும். அதன் பிறகு நிலையான எடையில் இருக்க ஆரம்பித்து விடும். அதைத் தாண்டியும் குழந்தையின் எடையில் மாற்றங்கள் தெரிந்தால் அதற்கு உணவு போதவில்லை அல்லது உடலில் நோய்த்தொற்று இருக்கிறது என்று அர்த்தம்.

மார்பகம்: குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்களுடைய மார்பகத்தை கவனித்தால் இந்த மாற்றம் உங்களுக்கு தெரியும். குடிப்பதற்கு முன் உங்கள் மார்பகம் மிகவும் பாரமாகவும் விறைப்பாக இருப்பது போன்றும் தோன்றும். இதே குழந்தை குடித்த பிறகு மிகவும் லேசானதாக தோன்றிடும்.

இடைவெளி: குழந்தை பிறந்த முதல் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது போன்ற சூழல் உருவாகும். அதன் பின்னர் இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை என்று அந்த இடைவேளி குறையும். இந்த இடைவெளியை கணக்கிடுங்கள். இடைவெளி நேரம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு தொடர் பசியிருக்கிறது, வயிறு நிறையவில்லை என்று அர்த்தம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us