தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/பெரி பெரி நோய் தடுப்பது எப்படி?

பெரி பெரி நோய் தடுப்பது எப்படி?

பெரி பெரி நோய் தடுப்பது எப்படி?


PUBLISHED ON : மார் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், பெற்றோர் கைகளில்தான் உள்ளது. ஆரோக்கிய வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புக்கும் பல்வேறு சத்துக்கள் தேவை. அவற்றில் சில:

'பி' வைட்டமின்களில் ஒன்றான, தையமின் பற்றாக் குறையினால் பெரி பெரி என்னும் நோய் ஏற்படும். வைட்டமின் 'பி' என்பது, 12 வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழு ஆகும். கால்களில் குடைச்சல், சோர்வு, இதய பலவீனம் போன்றவை, அந்த நோயின் அறிகுறிகளாகும்.

பழங்கள், ஈஸ்ட், முளைகட்டிய கொண்டைக்கடலை, பயறு, உளுந்து, அரிசித் தவிடு, பச்சைக் காய்கறிகள், முட்டை, கல்லீரல் போன்றவற்றில், இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.

மற்றொரு 'பி' வைட்டமினான, நிக்கோடினிக் அமிலம் பற்றாக்குறையினால், பெல்லாகிரா என்னும் நோய் ஏற்படும். பால், முட்டை, ஆட்டுக் கல்லீரல் ஆகியவற்றில், இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது. பல், ஈறு, ரத்தக் குழாய்கள் ஆகியவற்றின், ஆரோக்கியத்தை பாதுகாக்க வைட்டமின் 'சி' தேவைப்படுகிறது.

இந்த வைட்டமின் பற்றாக்குறையினால், ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகிறது. ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, காலி பிளவர், பட்டாணி, நெல்லிக்காய் போன்றவற்றில், இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, வைட்டமின் 'டி' தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால், ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. பால், வெண்ணெய், முட்டை, மீன் எண்ணெய் போன்றவற்றில், இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய, ரத்தக் கசிவு நோய்களைத் தடுக்க, வைட்டமின் 'கே' தேவைப்படுகிறது. மீன் எண்ணெயில் இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது. இதை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால், பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து காக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us