sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?

பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?

பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?


PUBLISHED ON : செப் 27, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதயம் பம்ப் செய்யும் ரத்தம், உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைவது போல, மூளையையும் சென்று அடைகிறது. இந்த ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மூளைத்தாக்கு ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்கிறோம்.

ஸ்ட்ரோக் எதனால் ஏற்படுகிறது?

ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக, பக்கவாதம் அல்லது ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இப்பிரச்னை பெருமூளையின் வலப்பகுதியில் ஏற்பட்டால், உடலின் இடப்பகுதி பாதிக்கப்படும். இடப்பகுதியில் பிரச்னை ஏற்பட்டால், வலப்பகுதி பாதிக்கப்படும்.

இதுவே சிறுமூளையின் வலது பக்கத்தில் பிரச்னை ஏற்பட்டால் வலது பக்கம் பாதிக்கப்படும். இடது பக்கத்தில் ஏற்பட்டால் இடது பக்கம் பாதிக்கப்படும்.

ஸ்ட்ரோக் என்றால் என்ன?

மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்து, ஏற்படும் ரத்தக் கசிவினால் மூளை பகுதியில் ரத்தம் சேர்ந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். இதுதான் ஸ்ட்ரோக்.

ஸ்ட்ரோக் ஏற்பட காரணம் என்ன?

பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், தலையில் அடிபடுவதுதான். ரத்தக் கொதிப்பு, மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல் ஆகியவையும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதுவே பெண்களுக்கு வேறுவிதமான பாதிப்பைத் தரும். சிலருக்கு பிரசவத்தின் போதும், கருக்கலையும் போதும் ரத்தம் உறையக்கூடும். அவை ரத்தநாளம் வழியாக மூளையை அடைந்து, ரத்த ஓட்டத்தைத் தடுத்துவிடும். இதனால் ஸ்ட்ரோக் ஏற்படும். இது உடனடியாகவோ, பின்னாளிலோ ஏற்படலாம்.

சிலர் திடீரென்று மயக்கமடைந்து விழுந்து விடுவார்கள். அப்போது கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இதன் காரணமாக ரத்த ஓட்டம் தடைபட்டு மூளையைப் பாதித்திருக்கக்கூடும். எம்.ஆர்.ஐ, சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் அவசியம்.

பின்னந்தலையில் அடிபடக் கூடாதா?

சிறு மூளை, பெருமூளை, தண்டுவடம் ஆகியவற்றை இணைக்கும் பகுதியான மெடுலா ஆப்லங்கேட்டா, பின்னந்தலையில்தான் இருக்கிறது. இங்கு அடிபட்டால் உடலின் பல பகுதிகளும் பாதிக்கப்படும். பெருமூளை பாதிக்கப்படுவதன் காரணமாக கை, கால் செயலிழப்பு ஏற்படும். சிறுமூளை பாதிப்பால் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுதல் பாதிக்கப்படும். தண்டுவடமும் பாதிக்கப்பட்டால் செயல்பாடுகள் பாதிக்கப்படும். பின்னந்தலையில் அடிபடாமல், கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மூளை பலத்திற்கு என்ன டயட்?

டென்ஷன் கூடாது. வறுத்தது, பொரித்தது கூடாது. கொஞ்சமாக சாப்பிடலாம். எண்ணெய், நெய், வெண்ணெய், அளவுக்கு மீறிய அசைவ உணவு, முட்டையின் மஞ்சள் கரு தவிர்க்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், அளவுக்கு அதிகமானால் ஜெல் போல் பிசுபிசு தன்மையைப் பெறும். இந்நிலையில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இவ்வாறு ரத்தம் ஜெல் போல் மாறினால் பக்கவாதம் ஏற்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us