தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நூறு வருஷம் வாழணும்!

நூறு வருஷம் வாழணும்!

நூறு வருஷம் வாழணும்!


PUBLISHED ON : செப் 26, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவீன மருத்துவ தொழில்நுட்பம், சுகாதாரம், தடுப்பூசி என்று பல அம்சங்களும் சேர்ந்து, சராசரி ஆயுட்காலத்தை கணிசமாக அதிகரித்து உள்ளது.

நம் நாட்டில் சராசரி ஆயுட்காலம் 69. இது மெதுவாக அதிகரித்தும் வருகிறது. 1960 முதல் தற்போது வரை 28 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது.

நீண்ட ஆயுளை பெறுவதற்கு முறையான உணவுப் பழக்கம், மகிழ்ச்சியான மனநிலை, சீரான உடற்பயிற்சி, மரபணு என்று பல விஷயங்கள் இருந்தாலும், சில அம்சங்களை ஆராய்ச்சியாளர்கள் 'ஹைலைட்' செய்கின்றனர்...

* இளம் வயதில் அதிக உடல் பருமனுடன் இருப்பது, ஆயுட் காலத்தைக் குறைக்கும்

* வாய், பற்களில் உருவாகும் பாக்டீரியாக்களை தினமும் சுத்தம் செய்யாவிட்டால், நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து, இதயக் கோளாறுகள் உட்பட பல பிரச்னைகளை உருவாக்கும்

* முப்பத்தி ஐந்து வயதிற்கு மேல், நுரையீல் மெதுவாக தன் வலிமையை இழக்கத் துவங்கும். தினமும் 10 நிமிடங்கள் சுவாசப் பயிற்சி செய்வதும், மூச்சை ஆழமாக இழுத்து விடுவதும் அவசியம்

* நம் நாட்டில் செப்டம்பர் - பிப்ரவரி மழைக்காலம்; புளூ வைரஸ் தொற்று பரவும். இதற்கான தடுப்பூசியை ஒவ்வொரு ஆண்டும் போட்டுக் கொள்வது, தொற்றிலிருந்து பாதுகாப்பு தரும்.

ஆதாரம்: ரீடர்ஸ் டைஜஸ்ட் ஹெல்த்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us